
துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ.!
துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடித்திருந்தார். மேலும் ராதிகா சரத்குமார், சிம்ரன், பார்த்திபன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டு இந்தத் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படக்குழு எந்த ஒரு அப்டேட்டையும் கொடுக்கவில்லை. தற்போது இந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அதாவது மே ஒன்றாம் தேதி துருவ நட்சத்திரம் திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
