Pushpa 2

சூர்யாவிற்கும் மருதாணி வைத்துவிடும் நந்தினி, சுரேகா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru  mudichu serial today promo update 25-01-25
moondru mudichu serial today promo update 25-01-25

நேற்றைய எபிசோடில் விஜி நந்தினியிடம் அல்வா வாங்கிட்டு வந்தியா என்று கேட்க அதெல்லாம் யோசிக்கிற அளவுக்கு கூட டைம் இல்ல ஏதேதோ நடந்து போச்சு என்று சொல்ல, அட நீ வேறமா கொஞ்சம் இல்லனா நந்தினி கொலை கேஸ்ல உள்ள தள்ளி இருப்பாங்க என்று கல்யாணம் சொல்ல என்னாச்சு நந்தினி என்று விஜி கேட்கிறார் பிறகு நந்தினி நடந்த விஷயங்கள் அனைத்தையும் விஜியிடம் சொல்லுகிறார். சூர்யா அண்ணா மட்டும் சரியான நேரத்தில் வரலனா பெரிய பிரச்சனையா இருக்கும் போலையே என்று சொல்ல ஆமா இந்த நேரத்தில் நான் ஜெயில்ல இருந்திருப்பேன் என்று சொன்ன கல்யாணம் அப்படியெல்லாம் பேசாதமா சின்னவரும் பெரியவரும் அப்படி உன்னை விட மாட்டாங்க என்று கோபப்படுகிறார்.

உடனே விஜியும் இதுதான் பழைய சூர்யா அண்ணன் என்று சொல்கிறார். உடனே நந்தினி என்ன எல்லாரும் பழைய சூர்யான்னு சொல்றீங்க என்று சொல்ல சூர்யா தம்பி எப்படிப்பட்ட பிரச்சனையா இருந்தாலும் அதை செஞ்சு முடிச்சிட்டு தான் வேற வேலையே பாப்பாரு. கெத்தா மாஸா இருப்பாரு உடனே கல்யாணமும் அவருக்கு சுத்தமா குடிக்கவே புடிக்காது ஆனா இப்போ அப்படி இல்ல அதெல்லாம் நாங்க சொல்லி உனக்கு எங்கம்மா தெரிய போகுது என்று சொல்ல விஜியும் நீ இன்னும் சூரியா அண்ணன் கிட்ட க்ளோசா பழகி பாரு அவரோட இன்னொரு முகம் தெரியும் என்று சொல்ல அதெல்லாம் எனக்கு வேண்டாம் நான் இங்கே இருந்துட்டு கிளம்பி போய்டுறேன் என்று மீண்டும் அதையே சொல்ல கல்யாணம் கோபப்பட்டு திட்டிவிட்டு சென்று விடுகிறார். பிறகு விஜயும் அட்வைஸ் செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்புகிறார்.

சுந்தரவல்லி ரூமில் கோபமாக உட்கார்ந்து கொண்டிருக்க அருணாச்சலம் வருகிறார். நானும் சூர்யாவும் பிரச்சினையில் இருக்கிறேன் சொல்லி வந்த, அதுவரைக்கும் சரி அதுக்கப்புறம் நந்தினிக்கு ஏற்பட்ட பிரச்சனையையும் அவங்க தங்கச்சியா அவமானப்படுத்தி பேசுவியா நீ இது மாதிரி பேசுற ஆள் கிடையாது ஏன் இப்படி பண்ற என்று கேட்க ,கரெக்ட் தான் நான் கஷ்டப்பட்டு வளர்த்த புள்ளைய வெளியே நிக்க வைப்பா என்ன பார்த்துட்டு அமைதியா இருக்க சொல்றீங்களா என்று கேட்க இப்போ நந்தினி மேல எந்த தப்பும் இல்லை எல்லாமே சுதாகர் மேல தான்றது முடிவாகிடுச்சு இப்போ உனக்கு அந்த குற்ற உணர்ச்சியே இல்லையா என்று கேட்கிறார். அவ எப்போ ஒழிஞ்சி போவானு பார்க்கிறேன் என்று கோபப்பட அருணாச்சலம் நீ கொஞ்சம் கொஞ்சமா உன்னை மாத்திக்க என்று சொல்ல சுந்தரவல்லி எதுவும் பேசாமல் இருக்க அருணாச்சலம் அமைதியாக உட்கார்ந்து விடுகிறார்.

நந்தினி கேசரி எடுத்து வைத்துக் கொண்டிருக்க விஜி அக்கா வந்தாங்க அவங்களுக்கு பேசிக்கிட்டே கொடுக்க மறந்துட்டேன் என்று சொல்ல அதுக்கு என்னமா நான் போய் கொடுத்துட்டு வரேன் என்று சொல்ல ,சரிங்க அண்ணே என்று சொல்லுகிரார். பிறகு டிபனையும் எடுத்து வைத்துக் கொண்டு இருக்க அசோகன் மோப்பம் பிடித்துக் கொண்டு டைனிங் டேபிள் பக்கத்தில் வந்து நிற்க மாதவி சுரேஷ் அசோகன் மூவரும் சாப்பிட உட்காருகின்றனர். மாதவி நந்தினியிடம் ஊர்ல நடந்த பிரச்சனைக்கு அப்புறம் நீ வீட்டுக்கே வரமாட்டேன்னு நெனச்சேன் என்று சொன்னார் ஆமா நானும் உன்னை எந்த ஜெயில்ல போடுவாங்கன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன் என்று சுரேகா சொல்லுகிறார். உடனே மேலே இருந்து சூர்யா இறங்கி வர, கல்யாணம் நந்தினி அம்மா கேசரி செஞ்சிருக்காங்க எப்படி இருக்குதுன்னு சாப்பிட்டுட்டு சொல்லுங்க என்று சொல்ல, சுரேகா இப்ப என்ன செஞ்சத ரிவியூ கொடுக்கணுமா என்று கேட்கிறார்.

ஆனால் சூர்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க என்னாச்சு சூர்யா என்று மாதவி கேட்கிறார் சொல்றேன் என சொல்லிவிட்டு, கல்யாணத்திடம் என்னோட தாய்குலத்தை கூட்டிட்டு வா என்று சொல்லுகிறார். இப்ப எதுக்கு அம்மாவை கூப்பிடுற என்று மூவரும் கேட்க பொறுத்திருந்து பாருங்க என்று சொல்லுகிறார். கல்யாணம் அம்மாவை சூர்யா சார் வர சொன்னாரு என்று சொல்ல கூப்பிட அருணாச்சலம் நீ இரு நான் போயிட்டு வரேன் என்று சொல்ல நான் எதுக்கு பயப்படனும் நானே வரேன் என்று வருகிறார். எதுக்கு வர சொன்ன சூர்யா என்று கேட்க ஊர்ல இருந்து வந்ததுல இருந்து எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு அதுக்கு தான் வர சொன்னேன் என்று சொல்லுகிறார்.

பாயிண்ட் நம்பர் ஒன் நானும் நந்தினியோ ஊருக்கு போனதிலிருந்து பிரச்சனை. எல்லாத்துக்கும் காரணம் அந்த சுதாகர் அந்த சுதாகரோட கார்ல இவங்க எப்படி வந்தாங்க. பாயிண்ட் நம்பர் 2 ஊர்ல இருக்கிற எல்லா பிரச்சனைக்கும் காரணம் சுதாகர் மட்டுமா? இல்லை இவங்களும் சேர்ந்து செஞ்சாங்களா ?பாயிண்ட் நம்பர் 3 போலீஸ் ஸ்டேஷன்ல பிரச்சனை வந்ததுக்கு அப்புறம் நான் உங்களுக்கு தான் போன் பண்ணேன். நீங்க எப்படியோ இவங்க கிட்ட சொல்லிட்டு வந்திருக்க மாட்டீங்க அப்படி இருக்கும்போது எப்படி கரெக்டா வந்தாங்க ?அங்க நடக்குற பிரச்சனை இவங்களுக்கு எப்படி தெரிஞ்சது. பாயிண்ட் நம்பர்4 அப்படியே கிளம்பி வந்து இருந்தாலும் நம்ப யாருக்காவது போன் பண்ணி இருக்கலாம் எனக்கும் நந்தினிக்கும் பண்ணிருக்க மாட்டாங்க ஆனா உங்க கிட்ட ஏன் பேசல. யார்கிட்டயும் சொல்லாம அப்படி திடீர்னு வரணும்ன்ற சர்ப்ரைஸ் என்ன? அமைதியா இருந்தா என்ன அர்த்தம் டாடி என்று கேட்க கேட்கிறான் சொல்லு என்று சொல்லுகிறார்.

மீதி எல்லாம் விடுங்க சுதாகர் கார்ல இவங்க எப்படி வந்தாங்க எனக்கு தெரிஞ்சி இவங்க ரெண்டு பேரும் தான் சேர்ந்து எல்லாம் பண்ணி இருக்காங்க என்று சொல்லுகிறார். மாதவி அம்மாவை எதுக்கு சந்தேகப்பட்டு பேசுற என்று கேட்கிறார். உடனே சுரேகாவும் அசோகனும் அத்தை பதறிப்போய் வந்தாங்க என்று சொல்ல நான் உங்க மூணு பேர் கிட்ட எந்த கேள்வியும் கேட்கல நீங்க எதுக்கு பதில் சொல்றீங்க வாய மூடுங்க என்று சொல்லுகிறார்.

அவன் உன் கிட்ட இருந்து தான் பதில் எதிர்பார்க்கிறான் சொல்லு என்று சொல்ல நானும் ஊர்ல இருந்து போன் வந்ததுனால பதறிப் போய் வந்தேன் அந்த ஊர்ல இருந்து தெரிஞ்சவங்க அதனால போன் பண்ணி வர சொல்லி இருந்தேன் என்று சொல்ல அவன் தான் எல்லாமே பண்ணலாம்னு தெரிஞ்சிருக்குள்ள என்று சொல்ல இப்பதான் எனக்கு தெரியும் அதுக்கு நான் என்ன பண்ண முடியும் என்று சுந்தரவல்லி தப்பித்து விடுகிறார். உடனே அருணாச்சலம் சரி விடு என்று சூர்யாவை சொல்ல, எனக்கு இன்னும் டவுட் கிளியர் ஆகல டாடி என்று சொல்ல போதும் இதுவரைக்கும் விட்டுவிடு என்று சொல்லி எல்லோரையும் அனுப்பி வைக்க சுந்தரவல்லி என்னை இப்படி அவன் எல்லாரும் முன்னாடி நிக்க வச்சு கேள்வி கேட்கிறான் என்று சொல்ல சரி விடு என்று அனுப்பி வைக்கிறார். நந்தினி மாடியில் செம்பருத்தி பூ மற்றும் இலையை காய வைத்துக் கொண்டிருக்க சூர்யா என்ன பண்ணிக்கிட்டு இருக்க நந்தினி என்று கேட்கிறார். இத வச்சு என்ன பண்ண போற என்று கேட்க இந்த இலையை வச்சு டீ போட்டா சூப்பரா இருக்கும் என்று சொல்லுகிறார். இதுக்கெல்லாம் உனக்கு டைம் இருந்ததா என்று கேட்க அதெல்லாம் ஊருக்கு போகும் போதே என் தங்கச்சி கிட்ட சொல்லி இலைய பரிச்சி உங்க கார்ல போட சொல்லிட்டேன் என்று சொல்ல ஓ அப்படியா என்று சொல்ல அந்த நேரம் பார்த்து மாதவி சுரேகா, அசோகன் வருகிறார் என்ன நந்தினி இது என்று கேட்க சூர்யா இந்த இலையை சாப்பிட்டா பணம் கொட்டோ, கொட்டோன்னு கொட்டுமா என்று சொல்ல மாதவி அப்படியா என்று கேட்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிற்கு மருதாணி வச்சுவிட சூர்யா நந்தினி பார்த்துக்கொண்டே இருக்க எதுக்கு சார் இப்படி பாக்குறீங்க என்று கேட்க எப்படி பார்க்கிறேன் என்று சூர்யா கேட்கிறார். நான் எப்படி பார்த்தேன்னு தெரியல ஆனா இப்போ நீ பார்த்தல்ல அது சூப்பர் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் சுரேகா அருணாச்சலத்திடம் உங்களுக்கு என்னையும் அக்காவையும் பிடிக்குமா இல்ல நந்தினி பிடிக்குமா என்று கேட்கிறார்.சுந்தரவல்லி மாதவி என அனைவரும் மருதாணி வைத்துக் கொண்டிருக்க சுந்தரவல்லி அருணாச்சலத்திலும் யார் இந்த மருதாணி எல்லாம் ரெடி பண்ணது என்று கேட்க அருணாச்சலம் நந்தினி பண்ணதுன்னு எப்படி சொல்றது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கிறார். பிறகு அனைவரும் சந்தோஷமாக மருதாணி வைத்துக் கொள்கின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru  mudichu serial today promo update 25-01-25
moondru mudichu serial today promo update 25-01-25