Pushpa 2

கருப்பு நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் சுந்தரி சீரியல் கேப்ரில்லா..!

கருப்பு நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் கேப்ரில்லா.

actress gabriella latest photoshoot photos

actress gabriella latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன் முடிவு பெற்றது. இந்த சீரியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஏனெனில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் வரை டிஆர்பி யில் முதல் மூன்று இடங்களிலேயே அதிகம் இருந்தது என்று சொல்லலாம். அதிலும் சுந்தரி சீரியல் கதாநாயகியான கேப்ரில்லாவின் நடிப்பிற்கு தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும். சீரியல் முடிந்த கையோடு அவர் கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்திருந்தார் இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து வந்தனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பேபி பம்ப் தெரிய கருப்பு நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.