
‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது: முழு விவரம்..
‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ஓடிடி.யில் வெளியாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்..
ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. குறிப்பாக, இப்படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க மட்டும் ரூ.90 கோடிக்கு மேல் செலவாகியுள்ளது.
இப்படம் ரிலீஸ் ஆகி 2 வாரங்கள் ஆகும் நிலையில், இதுவரை புஷ்பா 2 படத்தின் முதல் நாள் வசூலை கூட எட்டவில்லை. புஷ்பா 2 படம் முதல் நாளிலேயே ரூ.292 கோடி வசூலித்து இருந்தது.
படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதில் பிளாஷ்பேக் காட்சியில் வரும் ராம்சரணின் தந்தை கதாபாத்திரம் அக்மார்க் ஷங்கர் ஸ்டைலில் உருவாக்கப்பட்டு இந்தது. ஆனால், மற்ற காட்சிகளும் அதுபோல் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால், கேம் சேஞ்சர் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இவ்வகையில், இப்படம் சுமார் 200 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ஹெச்.டி பிரிண்ட் இணையத்தில் லீக்காகி விட்டதால், வேறு வழியின்றி ‘கேம் சேஞ்சர்’ படத்தை ஓடிடிக்கு அனுப்ப படக்குழு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, வருகிற பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினத்தில் ‘கேம் சேஞ்சர்’ ஓடிடியில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளது.
