Pushpa 2

இனியாவை சமாதானப்படுத்திய பாக்யா, ராதிகா போட்ட பிளான், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா இனியாவை சமாதானப்படுத்த ராதிகா பிளான் ஒன்று போட்டுள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 25-01-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 25-01-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா இனியாவிடம் எல்லா தப்புக்கும் காரணம் உங்க அப்பா தான் வந்து விட்டுட்டு நீ ராதிகா மேல தப்பு சொல்றதுல எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்று கூற அதற்கு ஈஸ்வரி இப்ப எதுக்கு கோபி மேல பழி போடுற என்று கேட்கிறார். நான் நடந்த பிரச்சனையை தான் சொன்னேன் ஆள் ஆளுக்கு ஏதாவது ஒன்னு சொல்லிக்கிட்டே இருந்தா பிரச்சனை எப்பவுமே முடியாது உனக்கு ஏதாவது பேசணும்னா உங்க அப்பா கிட்ட கேளு ராதிகா பத்தி பேசாத என்று சொல்ல கோபி இனியா என்று பேச ஆரம்பிக்க நான் யார்கிட்டயும் பேசல என்று ரூமுக்கு சென்று விடுகிறார்.

ஈஸ்வரி அவ கோவமா போறா நீ அமைதியா இருக்க பாக்கியா என்று சொல்ல என் பொண்ணை எப்படி சமாதானப்படுத்தினாலும் எனக்கு தெரியும் என்று சொல்லுகிறார் உடனே கூப்பிட நீ போய் பாரு கோபி என்று சொல்ல எனக்கு தெரியும்னு சொல்றேன்ல என்று சொல்லிவிட்டு பாக்யா செல்லுகிறார். முதலில் கையை வைக்க இனிய தட்டி விடுகிறார் உடனே பாக்யா கட்டிப்பிடிக்க விடுங்க விடுங்க என சொல்லியும் நான் விடமாட்டேன் என்று சொல்ல ஒரு கட்டத்திற்கு மேல் பாக்கியவை கட்டிப்பிடித்துக் கொள்கிறார் இனியா. நான்தான் ஃபர்ஸ்ட் பிரைஸ் வந்துருக்கணும் நான் நல்லா ப்ராக்டிஸ் பண்ண என்று சொல்ல எல்லா நேரமும் நீ பஸ்டா வரணும்னு இல்ல ஆனா இதுவே எனக்கு இவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா நீ இன்னும் டான்ஸ் காம்படிஷன் நிறைய இருக்கு அதுல கலந்துக்கிட்டு ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கிட போற அவ்வளவு தானே இதுக்கு எதுக்கு இப்படி உட்கார்ந்து கிட்டு இருக்க ஒரு வெற்றி ஈசியா கிடைச்சிடுச்சுன்னா அதோட அவசியம் புரியாமல் போயிடும் என்று ஆறுதல் படுத்திவிட்டு இன்னைக்கு உனக்கு புடிச்சதெல்லாம் செய்யலாம்னு இருந்தேன் ஆனா நீ தான் சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டியே என்று சொல்ல நான் கோவத்துல சொன்ன, என்று சொல்ல சரி இப்ப சாப்பிடுறியா என்று கேட்டுவிட்டு சாப்பிடுகிறேன் என்று சொன்னவுடன் பாக்யா சாப்பாடு எடுத்து வந்து ஊட்டி விட்டு படுக்க வைக்கிறார்.

மறுபக்கம் ராதிகா டான்ஸ் காம்பெட்டிஷனில் நடந்த விஷயத்தையும், இனியா சொன்ன வார்த்தையையும் யோசித்து கண்கலங்கி நின்று கொண்டிருக்க கோபி வருகிறார். உடனே கோபி நீயும் இனியாவுக்காக வருத்தப்படுறியா? இனிய சொன்னது கரெக்டு தான் நான் உன்னை கூட்டிட்டு போய் இருக்க கூடாது மேடையில ஏத்தி இருக்க கூடாது அவ ஜெயிச்சிடுவான் ரொம்ப கனவோட இருந்தா என்றெல்லாம் பேசுகிறார். எல்லா தப்பும் நான் தான் பண்ணேன் என்று பேசிவிட்டு நீ படுத்து தூங்கு நான் மேல போய் கொஞ்சம் தனிமையில் இருந்து வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

மறுநாள் காலையில் பாக்யா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற ராதிகா வருகிறார் காபி குடிக்கிறீங்களா என்று கேட்க நானே போட்டுக்கிறேன் பாக்யா என்று சொல்லிவிட்டு ராதிகா காபி போட்டுக் கொண்டிருக்க கொஞ்ச நேரம் கழித்து பாக்யா இனி அவங்களை அப்படி பேசினதுக்கு மன்னிச்சிடுங்க என்று சொன்னால் ராதிகா இனியா சொன்னது கரெக்ட் தானே என்று சொல்லுகிறார் நான் மேடையில் ஏறனும் என்று நினைக்கல பாக்யா என்று சொல்ல எனக்கு தெரியுங்க என்று சொல்லுகிறார். பிறகு தயங்கி நிற்க என்கிட்ட ஏதாவது சொல்லனுமா என்று பாக்யா கேட்கிறார் ஆமாம் என்று சொன்ன ராதிகா இன்னைக்கு எங்கேயாவது வெளியே போகலாமா குடும்பத்துடன் என்று கேட்கிறார் திடீர்னு எதுக்கு என்று கேட்க இல்ல எனக்கு தோணுச்சு அதனாலதான் என்று சொல்ல எனக்கு ஓகே தான் நான் வீட்ல இருக்கறவங்கள பத்தி தான் உங்களுக்கு தெரியுமே என்று சொல்ல உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க வீட்ல இருக்குறவங்கள சம்மதிக்க வேண்டியது என்னோட பொறுப்பு என்று சொல்லிவிட்டு கேட்க பாக்யா சம்மதித்து விடுகிறார் உடனே செல்வி நானும் வரலாமா என்று கேட்க கண்டிப்பா வாங்க என்று சொல்லிவிட்டு மேலே வருகிறார்.கோபி மற்றும் மயூ படித்துக் கொண்டிருக்க ராதிகா இன்னைக்கு ஈசிஆர் ல இருக்குற ரெசார்ட் போகலாம் என்று முடிவெடுத்த விஷயத்தை கோபியிடம் சொல்ல இந்த நேரத்துல எல்லாரும் ஒத்துப்பாங்களா என்று கேட்டேன் நீங்க பேசி ஒத்துக்க வையுங்க ஆனா நான் சொன்னேன்னு சொல்லாதீங்க நான் பாக்க கிட்ட கேட்டுட்டேன் அவங்க வரேன்னு சொல்லிட்டாங்க மத்தவங்க கிட்ட நீங்க பேசுங்க என்று சொல்லுகிறார்.

கோபி இனியா மற்றும் ஈஸ்வரி இடம் என்ன பேசுகிறார்.இனியா என்ன சொல்லுகிறார்?ஈஸ்வரியின் பதில் என்ன?அவர்கள் வர சம்மதிக்கிறார்களா?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 25-01-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 25-01-25