
முத்துவின் கையில் வந்து சேர்ந்த போன்,ரோகினி மற்றும் வித்யாவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ரோகினி மற்றும் வித்யாவிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வர அந்த டிராபிக் போலீஸ் இந்த பிரச்சினையில் தப்பிச்சிட்டுதா நினைக்காத என்ன ஏதாவது ஒரு பிரச்சினையில் கண்டிப்பா மாட்டுவ நான் உன்னை உள்ள தூக்கி போறேன் என்று சொல்ல அதற்கு முத்து நான் நியாயத்தை நம்பி நேர்மையாக இருக்கிறவன் இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் கிடையாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்த கிளம்ப அங்கு ஒரு கான்ஸ்டபில் இடம் மனோஜ் என்ன சொன்னா எதுக்கு அடிச்சிங்க என்று கேட்க அவரோட வேலை சீக்கிரமா முடிச்சு கொடுப்பதற்காக இன்ஸ்பெக்டர் இடம் என்ன கொடுக்க வேண்டும் என்று காதில் சொல்லுகிறார். இதை இன்ஸ்பெக்டர் மட்டும் கேட்டு இருந்தாருன்னா அவ்வளவுதான் என்று சொல்ல, முத்துவும் நீங்க அடிச்சதுல தப்பே இல்லை என்று சொல்லுகிறார் உடனே மீனாவிடம் அதனை சொல்ல மீனா சிரிக்கிறார்.
மறுபக்கம் தாத்தா பாட்டியை பார்க்க முத்து மீனாவும் வர அங்கு அவரது தூரத்து சொந்தக்காரர் ஒருவர் பாட்டிக்கு ரத்த தானம் கொடுக்கப்பட்ட சோசியல் மீடியாவில் இருக்கும் வீடியோவை பார்த்துவிட்டு வந்திருக்கிறார். இதனால் சந்தோஷப்பட்ட முத்து இனிமே உங்களுக்கு நிறைய சொந்தம் கிடைக்க போறாங்க நீங்க சந்தோஷமா போயிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். முத்து கிளம்பும்போது தாத்தா நிறுத்தி அன்னைக்கு ஒரு நாள் ஒரு பொண்ணு செருப்பு தைக்க வந்ததுபா அந்த பொண்ணு கிட்ட இருந்து போன் கீழே விழுந்துடுச்சு அதை எப்படி திருப்பி கொடுக்கிறது என்று தெரியவில்லை நீ எப்படியாவது தேடிக் கொடுத்துருப்பா என்று சொல்லி அந்த போனை முத்துவின் கையில் கொடுக்கிறார். கவர் போட்டு இருப்பதால் முத்து கவனிக்காமல் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார். பிறகு நீங்க சீக்கிரமா ஒரு பேரனோ பேத்தியோ பெற்று குடுங்க நாங்க கொஞ்சனும் என்று சொல்ல நடக்கும்போது கண்டிப்பா சொல்றேன் தாத்தா என்று சொல்லுகிறார்.
உடனே வீட்டுக்கு வந்த முத்து மீனாவும் அண்ணாமலையை பார்த்து நடந்த விஷயங்களை சொல்ல சந்தோஷம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர் உடனே மனோஜை பார்த்து முத்து சிரிக்க இவன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான் அப்பா என்று சொல்லுகிறார் இவன் எதுக்கு வந்தான் உன்னை காப்பாத்தவா என்று கேட்க அது எனக்கு பண்ணி இருக்கா அதுக்காக வரல இவரோட பணம் தொலைந்த விஷயமா பேசறதுக்காக வந்தா ஆனா அங்க வந்து கான்ஸ்டபிள் கிட்ட வந்து மாத்தி மாத்தி அடி வாங்கிட்டு இருக்கான். என்று சொல்லி சிரிக்கிறார் உடனே விஜயா என் புள்ள எதுக்கு அடிக்கணும் பாதிக்கப்பட்டவன் இவன் தானே என்று கேட்க அதற்கு இன்ஸ்பெக்டர் இடம் சொன்ன விஷயத்தை என்னவென்று கேளுங்கள் என்று சொல்ல மனோஜ் எதுவும் சொல்லாமல் தயங்கி நிற்கிறார். அவ சொல்ல மாட்டான்பா நானே சொல்றேன் என்று அண்ணாமலை காதில் முத்து சொல்லுகிறார் உடனே கோபப்பட்ட அண்ணாமலை மனோஜை வந்து அரைகிறார்.
மாத்தி மாத்தி மனோஜ் அடி வாங்கிக் கொண்டே இருக்க மனோஜ் வெளியே சென்று விடுகிறார் ரூமுக்குள் ரோகினி சென்றுவிட எனது நடக்குது இங்க என்ன சொன்னார் என்று சொல்ல அது வேற நான் என் வாயால சொல்லணுமா என்று அண்ணாமலை கோபப்படுகிறார். உடனே முத்து விடம் நீ போய் வேலையை பாரு இதுக்கு மேல இது மாதிரி வம்பு வெச்சுகாதே என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.ஆனால் விஜயா எனக்கு தலையே வெடிசிடும் போல இருக்கு என்ன விஷயம்னு சொல்லுங்க தயவுசெய்து என்று சொல்ல அண்ணாமலையும் விஜயாவும் ஹாலில் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர் ரூமில் வந்த முத்து மீனாவும் இந்த போன் யாரோ விட்டுட்டு போயிட்டாங்கன்னு சொல்றாங்க யாரு என்னன்னு வேற கண்டுபிடிச்சு கொடுக்கணும் என்று மீனா கையில் கொடுக்க மீனா போன எடுத்துப் பார்க்க இது உங்களோட போன் மாதிரியே இருக்குதுங்க என்று சொல்லுகிறார்.
ஆமா என்னோட போன் மாதிரி தான் இருக்கு போன் ஆஃப் ஆயிருக்கு என்று சொல்லி சார்ஜ் போட்டு பார்க்க அதில் இவர்கள் போட்டோ வந்த உடனே இது என்னோட போன் தான் என்று கன்பார்ம் செய்துவிட்டு உடனே அண்ணாமலை இடம் ஓடிவந்து என்னோட போன் கிடைச்சிடுச்சுப்பா என்று சொல்லுகிறார். இதனை ரோகிணி ரூமில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். இவங்க போன் எல்லாம் கிடைக்குது என் பையனோட காசு தான் கிடைக்க மாட்டேங்குது என்று விஜயா சொல்ல நல்லவங்களோட பொருள் சீக்கிரமா கிடைச்சுரும்னு சொல்லுவாங்க என்று முத்து சொல்ல அதற்கு விஜயா அப்ப என் பயன் கெட்டவனா என்று கேட்கிறார். எப்படி கிடைச்சது என்று அண்ணாமலை கேட்க அதற்கு அந்த செருப்பு தைக்கிற தாத்தா ஒரு பொண்ணு செருப்பு தைக்க வந்தது அப்போ இந்த போன் கீழே விழுந்து தான் என்கிட்ட யாரும் கேட்டு கொடுத்து என்னோட போன் என்று சொல்லுகிறார்.உடனே அண்ணாமலை அப்போ இந்த போன்ல இருந்து தானே சத்யா ஓட வீடியோ லீக் ஆயிருக்கு என்று கேட்கிறார். ஆமாம் பா என்று சொல்ல அதற்கு அண்ணாமலை போன தொலைச்ச அந்த பொண்ணு கண்டுபிடிச்சா இந்த வீடியோ யாரு லீக் பண்ணாங்கன்றதே தெரிஞ்சுடும் கொஞ்சம் சொல்ல கரெக்டுப்பா சீக்கிரமாவே கண்டுபிடிக்கிறேன் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
முத்து காரில் போய்க்கொண்டிருக்க வழியில் ஒருவரை சந்தித்து காரை நிறுத்துகிறார் உடனே ஓடி வந்து பேச அவர்கள் இருவரும் நண்பர்கள் என தெரிய வருகிறது. திருமணம் நடந்து விஷயத்தை பற்றி கேட்க புடிக்காம தான் நடந்தது ஆனா இப்ப அப்படி இல்லை என்று மீனாவை பற்றி பெருமையாக பேசுகிறார். உனக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும் என்று இருவரும் பேசிக்கொள்கின்றனர்.
ரோகினி வித்யாவின் வீட்டிற்கு கோபமாக வந்து போனை பற்றி விசாரிக்க அது தான் கடலில் போட்டனே என்று சொல்லுகிறார் எந்த கடல்ல என்று கேட்க பெசன்ட் நகர் என்று சொல்லுகிறார் முதல் மெரினானு சொன்ன என்று கேட்க கடல்ல எல்லாமே ஒன்னு தானே என்று சொல்லுகிறார் பொய் சொல்லாத வித்யா என்று கேட்க இப்போ அந்த மொபைல் முத்துகையில் இருக்கு என்று சொல்லிய பிறகு வித்யா உண்மையை ஒத்துக் கொள்கிறார் ரோகினி வித்யாவிடம் கோபமாக என்ன பேசுகிறார்? அதற்கு வித்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
