நந்தினி செய்த விஷயம், சூர்யா கொடுத்த பதிலடி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சொல்ற வார்த்தைல உண்மை இருக்குன்னு நிரூபிக்க எங்க ஊர்ல துண்டு போட்டு தாண்டுவாங்க நான் உசுரா நினைக்கிற என் தங்கச்சியை இப்போ தாண்டுவேன் என சொல்லி ரஞ்சிதாவே படுக்க வைத்து நந்தினி தாண்டுகிறார்.
உடனே சூர்யா சுரேகாவிடம் அன்னைக்கு உன் ரூமுக்குள்ள நீ சொல்லாம தான் வந்தான்னு உங்க அம்மாவை படுக்க வச்சு தாண்டி நீ ப்ரூஃப் பண்றியா என்று கேட்கிறார். யாரோ ஒருத்தர் கிட்ட தேடி புடிச்சு கடன் வாங்குற ஆனா என்கிட்ட வாங்க மாட்ட என்று கேட்க, ஆனா எனக்கு என்ன தகுதி இருக்குனு எனக்கு நிஜமா தெரியல என்று நந்தினி சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
