பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த விஷால்.. மருத்துவமனையில் அனுமதி..!

பொது நிகழ்ச்சியில் விஷால் மயங்கி விழுந்துள்ளார்.

actor Vishal admitted to hospital

actor Vishal admitted to hospital

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நீண்ட வருடங்களாக வெளியாகாமல் இருந்த மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவில் ஒரு பகுதியாக திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டு இருந்த நிலையில் நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு மயக்கம் வந்து விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஷால் ரசிகர்கள் அவர் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

actor Vishal admitted to hospital

actor Vishal admitted to hospital