“ஓடிப் போய் கல்யாணமா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” – புதிய கோணத்தில் ‘பியார் பிரேமா கல்யாணம்’!

Web Ads

திருமணம் குறித்த வழக்கமான பார்வையை தலைகீழாக மாற்றி, காதல், திருமணம் மற்றும் அதற்குப் பிறகான வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் சொல்ல வருகிறது ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம். இப்படத்தின் புதிய புரமோ வீடியோவை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் இளன், இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்கு படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் பவி கதாபாத்திரத்தில் சான்வீ மேக்னா நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டு செல்ல அவர் மறுக்கிறார். இதனால் வழக்கத்திற்கு மாறாக அவரது கணவரான இளன், மனைவியின் வீட்டிற்கே குடிபெயர்கிறார். இதன்பிறகு ஏற்படும் குடும்ப கலாட்டா, கலாச்சார மோதல்கள், உறவுகளுக்குள் உருவாகும் சிக்கல்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களை நகைச்சுவையுடன் படம் பதிவு செய்கிறது.

“சந்தோஷமாக வாழ்வதற்கான விதிகளை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை” என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கப் பிரிவு துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில், வழக்கமான விதிகளை பின்பற்றாமல் நவீன உறவுகள், குடும்பம் மற்றும் தனிப்பட்ட மகிழ்ச்சியை வித்தியாசமான கோணத்தில் பேசும் படமாக ‘பியார் பிரேமா கல்யாணம்’ உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Web Ad 2

தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் கூறுகையில், உண்மையான தமிழ் கதைகளும் உலகளாவிய ரசிகர்களை சென்றடைய முடியும் என்பதை ‘மேட் இன் கொரியா’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு நிரூபித்துள்ளதாகவும், அதேபோல் இதயப்பூர்வமான நகைச்சுவை மற்றும் நவீன உறவுகளின் சவால்களை தமிழ் குடும்ப மதிப்புகளுடன் இணைத்து இப்படம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம், காதல், குடும்பம் மற்றும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை மையமாகக் கொண்டதாக உருவாகியுள்ளது.

திருமணத்திற்குப் பிறகுதான் உண்மையான ஆச்சரியங்கள் தொடங்குகின்றன என்ற வித்தியாசமான கருத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)