வசூல் வேட்டையில் ‘ஜனநாயகன்’… 4 நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Web Ads

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தமிழ்நாட்டில் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் ‘ஜனநாயகன்’ படத்தை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருவதால், படத்தின் வசூலும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Web Ad 2

கடந்த ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது 4 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.85 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான முதல் வாரத்திலேயே ரூ.85 கோடியை கடந்துள்ள இந்த வசூல், ‘ஜனநாயகன்’ படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்துள்ள வரவேற்பை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.