ஆகஸ்ட் 2-ம் தேதி ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இசை வெளியீட்டு விழா!

Web Ads

நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

Web Ad 2

‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான படத்தின் இரண்டாவது பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலை சூர்யாவே தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார். கென் கருணாஸ் வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடல், குடும்பத் திருமண விழாவின் கொண்டாட்டங்களை மையமாகக் கொண்டு துள்ளலான இசையில் அமைந்துள்ளது.

இந்நிலையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.