யோகி பாபுவுக்கு இரட்டை மகிழ்ச்சி!

மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று முடிவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடினர்.
‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’ உள்ளிட்ட படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ளார்.

இந்தப் படத்தில் கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மனித உணர்வுகள், ஆன்மிகத் தேடல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘காகங்கள்’, தற்போது டப்பிங், சவுண்ட் டிசைன், பின்னணி இசை, விஎஃப்எக்ஸ் (VFX), டிஐ (Digital Intermediate) உள்ளிட்ட இறுதிக்கட்ட பின்னணிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள ‘காகங்கள்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட்கள், புதிய போஸ்டர்கள் மற்றும் புரமோஷன் பொருட்கள் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.