கேரளாவில் துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் வெளியிடும் ‘ஏழு கடல் ஏழுமலை’!

Web Ads

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழுமலை’. நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ஒரு எலியும் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம், நிவின் பாலி மற்றும் சூரி இணைந்து நடித்துள்ளதால் தொடக்கம் முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ‘ஏழு கடல் ஏழுமலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. குறிப்பாக, கேரளாவில் இப்படத்தை நடிகர் துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

துல்கர் சல்மானின் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான வேஃபாரர் ஃபிலிம்ஸ், இப்படத்தின் கேரள திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. இதனால் கேரள ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Web Ad 2

உணர்வுப்பூர்வமான கதைகளை தனது தனித்துவமான பாணியில் வழங்கி வரும் இயக்குநர் ராம், இந்தப் படத்தையும் வித்தியாசமான களத்தில் உருவாக்கியுள்ளார். நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோரின் கூட்டணியுடன் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ‘ஏழு கடல் ஏழுமலை’, வரும் அக்டோபர் 1-ம் தேதி கேரளா உட்பட உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.