சிறை அக்‌ஷய் குமாரின் புதிய கிரைம் டிராமா திரைப்படம் தொடக்கம்!

Web Ads

‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் LK அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படம், இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. கிரைம் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பும் இன்று தொடங்கியது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இயக்குகிறார். இவர் இயக்குநர் H. வினோத்தின் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘ஜனநாயகன்’ உள்ளிட்ட படங்களில் H. வினோத்துடன் இணைந்து பணியாற்றிய விஷ்ணு அமரன், தற்போது இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்தின் ஒளிப்பதிவை சரவணன் ராமசாமி மேற்கொள்கிறார். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். படத்தொகுப்பை கலைவாணன் R, கலை இயக்கத்தை P.S. ஹரிஹரன், ஆடை வடிவமைப்பை ஆர்த்தி நீலகிருஷ்ணன் கவனிக்கின்றனர். சண்டைக் காட்சிகளை ஆக்ஷன் சந்தோஷ் அமைக்கிறார்.

Web Ad 2

சென்னை, கொடைக்கானல் மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மாறுபட்ட கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், கிரைம் டிராமா ஜானரில் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகி வருகிறது.

‘சிறை’ படத்திற்குப் பிறகு ‘ராவடி’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்த LK அக்ஷய் குமார், தற்போது அதிலிருந்து வேறுபட்ட களத்தில் கிரைம் டிராமா படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து வரும் அவரது பயணத்தில், இப்படமும் மற்றுமொரு புதிய படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் பூஜை விழாவில் இயக்குநர்கள் H. வினோத், சிறுத்தை சிவா, R. S. துரை செந்தில்குமார் உள்ளிட்டோரும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.