அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமியின் லவ் வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியானது!

Web Ads

சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கியுள்ள ‘லவ் (Love)’ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நவீன காதல், டேட்டிங் மற்றும் உறவுகளின் மாற்றங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடரில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்றைய டிஜிட்டல் உலகில் காதல் மற்றும் உறவுகள் எவ்வாறு மாறியுள்ளன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் இந்தத் தொடர் பேசுகிறது. குறிப்பாக, டேட்டிங் ஆப்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள கதையில், காதலுக்கு ‘கெமிஸ்ட்ரி’ முக்கியமா அல்லது ‘காம்பாட்டிபிலிட்டி’ முக்கியமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

‘#Love’ தொடரில் தாரா மற்றும் மேத்யூ என்ற இரு டேட்டிங் ஆப் நிறுவனர்கள் கதையின் மையமாக உள்ளனர். பிறருக்கான சரியான துணையைத் தேடிக் கொடுக்கும் இவர்கள், தங்களுக்கான காதலை மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றனர். போட்டியாளர்களாக இருக்கும் இருவருக்கும் இடையே உருவாகும் காதல், கருத்து மோதல்கள் மற்றும் உறவுகளே கதையின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.

இத்தொடரை இயக்கியுள்ள பாலாஜி மோகன், காதல் மற்றும் நவீன உறவுகளை தனது தனித்துவமான நகைச்சுவை பாணியில் அணுகியுள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Web Ad 2

‘#Love’ தொடரை நிர்மல் வில்லியம்ஸ் எழுதியுள்ளார். ஷரதா சுப்ரமணியன் மற்றும் ஸ்வேதா சக்ரவர்த்தி இணை எழுத்தாளர்களாக பணியாற்றியுள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேத்யூ கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸும், தாரா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமியும் நடித்துள்ளனர்.

தொடர் குறித்து பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, தாரா கதாபாத்திரத்துடன் தன்னை பெரிதும் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்ததாக தெரிவித்துள்ளார். அதேபோல், மேத்யூ கதாபாத்திரத்தின் உணர்வுகள் மற்றும் பலவீனமான பக்கங்கள் தன்னை கவர்ந்ததாக அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார்.

காதல், நட்பு, குடும்பம், லட்சியம் என உறவுகளின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் ‘#Love’ வெப் சீரிஸ் அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.