சிவகார்த்திகேயனின் 27-வது படம் தொடக்கம்

சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK27 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிரட்டலான போஸ்டருடன் வெளியாகியுள்ளது. ‘அமரன்’ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், இப்படத்தில் புதிய அவதாரத்தில் நடிக்கிறார்.
‘பார்க்கிங்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்றுள்ள இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாது லோகர் நடிக்கிறார். இருவரும் இணையும் முதல் திரைப்படம் இதுவாகும்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சித்தார்த் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

படத்தின் அறிவிப்பு போஸ்டரில் சிவப்பு நிற கார், அதைச் சுற்றி திரண்டிருக்கும் மக்கள், புகை மற்றும் அதிரடியான ஒளியமைப்பு இடம்பெற்றுள்ளன. இதனால் SK27 ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் படமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற ஆர். கலைவாணன் எடிட்டராகவும், ஓம் ஒளிப்பதிவாளராகவும், ராஜீவன் கலை இயக்குநராகவும், பிரவீன் ஆடை வடிவமைப்பாளராகவும், ஸ்டீவ்ன் குமார் ஸ்டண்ட் மாஸ்டராகவும், டூனே ஜான் போஸ்டர் டிசைனராகவும் பணியாற்றுகின்றனர்.
புதிய கூட்டணி, மாறுபட்ட கதைக்களம் மற்றும் வலுவான தொழில்நுட்பக் குழுவுடன் SK27 தொடக்கத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
