கவின், நயன்தாரா நடித்த ‘ஹாய்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ரசகுல்லா’ பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை எஸ். கண்ணன் மேற்கொண்டுள்ள நிலையில், படத்தொகுப்பை பிலோமின் ராஜ் கவனித்துள்ளார்.
குடும்பங்கள் ரசிக்கும் ஃபீல்-குட் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ்.எஸ். லலித்குமார் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி.ஜே., கே.எஸ். மயில்வாகனன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.

இந்தப் படம் ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே வெளியான ‘கன்னக் குழியா’ பாடல் மூன்று மில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் பார்வைகளை பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள ‘ரசகுல்லா’ பாடலும் ரசிகர்களிடையே கவனம் பெற்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்தப் பாடலை இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதியுள்ள நிலையில், அனிருத் தனது குரலில் பாடியுள்ளார். பிருந்தா மாஸ்டர் நடன அமைத்துள்ள இந்தப் பாடலில் ஜென் மார்ட்டினின் இனிமையான இசை, நயன்தாரா – கவின் ஜோடியின் திரை வேதியியல், வண்ணமயமான காட்சிகள் மற்றும் நேர்த்தியான நடன அமைப்பு ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.