விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆகாயம்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Web Ads

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் “ஆகாயம்”. இந்தப் படத்தை, “தினந்தோறும்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

“தினந்தோறும்” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அந்தப் பெயரிலேயே ரசிகர்கள் மற்றும் திரையுலகினரால் அழைக்கப்பட்ட நாகராஜ், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் “மின்னலே”, “காக்க காக்க” உள்ளிட்ட வெற்றிப் படங்களில் கதாசிரியராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“கன்னி மாடம்” திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், ஆலிஷா மிராணி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், “மெய்யழகன்” படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன், தீபா, “மகாராஜா” திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி மற்றும் ரைட்டர் ஹரிஹரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“சென்னை டு சிங்கப்பூர்”, “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் நல்லமுத்து இந்தப் படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். “நீர்ப்பறவை”, “அயோத்தி” உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

பாடல்களை “நூறு சாமிகள் இருந்தாலும்” என்ற பிரபலமான அம்மா பாடலை எழுதிய ஏக்நாத், மேலும் சாரதி மற்றும் ரமணிகாந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

Web Ad 2

“ஒரு நொடி”, “ஜென்ம நட்சத்திரம்” படங்களின் படத்தொகுப்பாளர் சூர்யா எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார். சண்டைக் காட்சிகளை பையர் கார்த்திக் அமைத்துள்ளதுடன், நடன அமைப்பாளராக மணிகண்டன் பணியாற்றியுள்ளார்.

மக்கள் தொடர்பை புவன் செல்வராஜ் மேற்கொள்கிறார். தயாரிப்பு மேற்பார்வையை பிரசாந்த் கவனித்துள்ளார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். வெளியான போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள “ஆகாயம்” திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.