“மாண்புமிகு மாணவ சமுதாயம்” – மாணவர்களின் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் வி. ஹரிகிருஷ்ணன்

“இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம்; இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள்; எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் உள்ளது” என வி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்கள் சமுதாய உணர்வுடன் வளர்ந்து, சமூக மேம்பாட்டிற்காகப் பாடுபடுவது அவர்களின் கடமையாகும். மாணவர்களின் எதிர்கால செயல்பாடுகள் நாட்டின் வளர்ச்சியிலும், சமூக முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இன்றைய மாணவர்களின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி, ஜனநாயகத்தின் வெற்றி” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தங்களது கல்வியுடன் சமூக அக்கறையையும் வளர்த்துக் கொண்டு, நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்குவதில் பங்களிக்க வேண்டும் என்றும் மேற்கு மாம்பலம் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் முன்னாள் தலைவர் வி. ஹரிகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
View this post on Instagram