25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்! பிரம்மாண்டமாக நடைபெற்ற சூர்யா ரசிகர்களின் ஃபோட்டோஷூட்

Web Ads

அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட ஃபோட்டோஷூட் நிகழ்வில், 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா ரசிகர்களை நேரில் சந்தித்தார். ஒவ்வொரு ரசிகரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களின் நலன் குறித்து கேட்டறிந்த சூர்யா, பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என அன்புடன் அறிவுறுத்தினார்.

Web Ad 2

ஒவ்வொரு ரசிகரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து நலம் விசாரித்த சூர்யாவின் எளிமையான அணுகுமுறை, அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.