பிக் பாஸ் 10-ல் ஆட்டமே மாறப்போகுது! வந்தாச்சு புதிய திருப்பம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், போட்டி தற்போது புதிய திருப்பத்தை நோக்கி நகர்கிறது. இன்றைய எபிசோடில் லட்சுமி பிரியா, சவின்யா மற்றும் ஜாவேத் ஷெரிப் ஆகிய மூன்று புதிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளனர்.
‘திருப்புமுனை’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ப்ரோமோவில் தொகுப்பாளர் விஜய் சேதுபதியுடன் வனிதா விஜயகுமாரும் இடம்பெற்றுள்ளார். இதனால் இன்றைய எபிசோடு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
புதிய போட்டியாளர்கள் ஏற்கனவே வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடன் இணைக்கப்பட உள்ளனர். அதன்படி, லட்சுமி பிரியா – குமரன், சவின்யா – அஸ்மிதா, ஜாவேத் ஷெரிப் – தன்யா என இணைக்கப்படுகின்றனர்.

ஆனால் இந்த இணைப்புகளில் மிகப்பெரிய திருப்பமாக, இந்த ஆறு பேரில் மூவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பயணிக்க உள்ளனர்; மீதமுள்ள மூவர் வெளியேற உள்ளனர். இதனால் ஒவ்வொரு இணைப்பும் போட்டியாளர்களின் பிக் பாஸ் பயணத்தையே தீர்மானிக்கும் முக்கியமான கட்டமாக மாறியுள்ளது.
இதனுடன், வெளியேற்றத்திலிருந்து விலக்கு அளிக்கும் ‘பாஸ்’ ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. போட்டியாளர்களின் ஆட்டத்தில் இந்த பாஸ் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய போட்டியாளர்களின் வருகை, எதிர்பாராத இணைப்புகள் மற்றும் வெளியேற்றத்திலிருந்து விலக்கு பாஸ் என அடுத்தடுத்து வரும் திருப்பங்களால், பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ன் இன்றைய எபிசோடு பரபரப்பாக அமைய உள்ளது.
