• Likes
  • Followers
  • Subscribers
  • Followers
  • Tuesday, September 29, 2026

Publisher Publisher - Kalakkalcinema provides the latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, trailers, and other latest Tamil movie news updates.

  • Tamil News
  • Gallery
  • Trailers
  • Functions
  • Reviews
  • Latest Videos
  • Video Songs
Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews
  • Home
  • News
  • ஸ்வேன் அகாடமி லோகோவை வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
NewsLatest NewsTamil Cinema News

ஸ்வேன் அகாடமி லோகோவை வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

By Suresh Kandasamy On Sep 29, 2026
Share
Web Ads

திரை எழுத்தாளர்களின் திறமைகளை வளர்ப்பதுடன், அவர்களின் படைப்புரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN), ஐபி கிளைம்ப் நிறுவனத்துடன் இணைந்து ‘ஸ்வேன் அகாடமி’யை சென்னையில் தொடங்கியுள்ளது.

இதன் தொடக்க விழாவை முன்னிட்டு, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் திரை எழுத்தாளர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வரவேற்ற ஸ்வேன் அமைப்பின் தலைவரும் இயக்குநருமான சேரன், அகாடமியின் நோக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

கதை உருவாக்கம், திரைக்கதை எழுதும் நுணுக்கங்கள், நவீன கதைசொல்லல் முறைகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது எழுத்துப் பயணம் மற்றும் திரைக்கதை உருவாக்கம் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, புதிதாக தொடங்கப்பட்ட ‘ஸ்வேன் அகாடமி’யின் லோகோ மற்றும் பாடத்திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.

Related Posts

திரிஷ்யம் 3 ஹிந்தி பதிப்பை வெளியிட தடை கோரி ஸ்ரீப்ரியா வழக்கு

Sep 29, 2026

ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு “ராமாயணா” படத்தின் பிடிஎஸ் வீடியோ வெளியீடு

Sep 29, 2026
Web Ad 2

வளர்ந்து வரும் கதைசொல்லிகள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்கும் வகையில் இந்த அகாடமி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வில், ஐபி கிளைம்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜி.கே. திருநாவுக்கரசு மற்றும் லோகேஷ் கனகராஜ் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடலும் நடைபெற்றது.

மேலும், பாடலாசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்க்கி, நவீன கதைசொல்லலில் உருவாகி வரும் தொழில்நுட்ப அணுகுமுறைகள் மற்றும் கதை இயக்கவியல் குறித்து பேசினார். 916 ஸ்டூடியோ சார்பில் நடைபெற்ற அமர்வில், வேகமாக வளர்ந்து வரும் வெர்ட்டிக்கல் ஷார்ட் ஃபார்ம் டிராமா வடிவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

எழுத்தாளரும் இயக்குநருமான லீனா மணிமேகலை, மலையாள எழுத்தாளர் மற்றும் இயக்குநர் அனுராஜ் மனோகர், மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு படைப்பாளர்களும் சிறப்பு அமர்வுகளில் பங்கேற்று தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

திரைக்கதை எழுத்தின் நுட்பங்கள், நவீன கதைசொல்லல், டிஜிட்டல் காலத்தில் எழுத்தாளர்களுக்கான புதிய வாய்ப்புகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிகழ்ச்சியில் விரிவாகப் பேசப்பட்டன.

சேரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர். சுந்தர்ராஜன், சமுத்திரக்கனி, சினேகன் உள்ளிட்ட மூத்த படைப்பாளிகளின் தலைமையில் செயல்பட்டு வரும் ஸ்வேன் அமைப்பின் இந்த புதிய முன்னெடுப்பு, தென்னிந்திய திரை எழுத்தாளர்களின் அடுத்த தலைமுறைக்கு முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் முயற்சியாக அமைந்துள்ளது.

Continue Reading
director lokesh kanagarajDirector Lokesh Kanagaraj Unveils SWAN Academy Logo
Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail

Prev Post

ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு “ராமாயணா” படத்தின் பிடிஎஸ் வீடியோ வெளியீடு

Next Post

திரிஷ்யம் 3 ஹிந்தி பதிப்பை வெளியிட தடை கோரி ஸ்ரீப்ரியா வழக்கு

You might also like More from author
News

திரிஷ்யம் 3 ஹிந்தி பதிப்பை வெளியிட தடை கோரி ஸ்ரீப்ரியா வழக்கு

News

ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு “ராமாயணா” படத்தின் பிடிஎஸ் வீடியோ வெளியீடு

News

தென்னிந்திய ஓ.டி.டி தயாரிப்பாளர்கள் சங்கம் – நடிகை ராதிகா சரத்குமார் தொடங்கி…

News

ஃபஹத் பாசில் அந்த கேரக்டராகவே மாறிடுவார்! – நடிகர் சூர்யா

Prev Next

Cinema Events

Functions

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி…

Functions

லவ் வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்

Functions

பத்தா இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

Functions

அன்பில் அவன் திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி…

Prev Next 1 of 54

News

திரிஷ்யம் 3 ஹிந்தி பதிப்பை வெளியிட தடை கோரி ஸ்ரீப்ரியா வழக்கு

Sep 29, 2026

ஸ்வேன் அகாடமி லோகோவை வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

Sep 29, 2026

ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு “ராமாயணா” படத்தின் பிடிஎஸ் வீடியோ வெளியீடு

Sep 29, 2026

தென்னிந்திய ஓ.டி.டி தயாரிப்பாளர்கள் சங்கம் – நடிகை ராதிகா சரத்குமார் தொடங்கி வைத்தார்

Sep 28, 2026

ஃபஹத் பாசில் அந்த கேரக்டராகவே மாறிடுவார்! – நடிகர் சூர்யா

Sep 28, 2026

பிக் பாஸ் 10-ல் ஆட்டமே மாறப்போகுது! வந்தாச்சு புதிய திருப்பம்

Sep 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்! பிரம்மாண்டமாக நடைபெற்ற சூர்யா ரசிகர்களின் ஃபோட்டோஷூட்

Sep 27, 2026

எனது விருப்பப் பட்டியலில் இருந்த ஒன்று! – சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணைந்த விக்கி கௌஷல்!

Sep 27, 2026

ராவணனாக ராக்கிங் ஸ்டார் யஷ்… வெளியானது ராமாயணம் படத்தின் பிரம்மாண்ட போஸ்டர்!

Sep 27, 2026

ஜெம் வீரமணி விவகாரத்தில் அமீர் – வெற்றிமாறன் அறிக்கை

Sep 27, 2026

சினிமா துறையின் முக்கிய பிரச்சினைகள்… அமைச்சர் முன் வைத்த தயாரிப்பாளர்கள்

Sep 27, 2026

அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமியின் லவ் வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியானது!

Sep 26, 2026

சிவகார்த்திகேயனின் 27-வது படம் தொடக்கம்

Sep 26, 2026

ராமாயணம் படத்தின் முதல் பாடல் ‘ஜெய் ஜெய் ராம்’ வெளியானது!

Sep 26, 2026

வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் மண்டவெட்டி படத்தின் முதல் சிங்கிள் ராட்சசியே வெளியானது!

Sep 26, 2026

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷுடன் நடிக்கிறேன் – வடிவேலு மகிழ்ச்சி!

Sep 26, 2026

லவ் அண்ட் வார் படத்தில் ஆலியா பட்டின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Sep 25, 2026

மதுரையில் பூஜையுடன் தொடங்கியது தனுஷின் ‘D56’ படப்பிடிப்பு!

Sep 25, 2026

விறுவிறுப்பாக நடைபெறும் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கிங் அண்ட் குயின்ஸ்’ படப்பிடிப்பு!

Sep 25, 2026

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டிரெய்லர் வெளியானது!

Sep 25, 2026
Prev Next 1 of 384
About Us

A Complete Tamil Cinema and Tamil Cinema News Official Portal kalakkalcinema.com The most awaited fun filled, entertaining package was launched on 26th Feb 2009.

Contact : kalakkalcinema@gmail.com

Stay With Us
  • Facebook Likes
  • Twitter Followers
  • 1M Subscribers
  • Instagram Followers
© 2026 - Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews. All Rights Reserved.
You cannot print contents of this website.
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.