பாக்யா செய்த விஷயம், அதிர்ச்சியில் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
பாக்யா செய்த விஷயத்தால் ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரன்ட் திறக்க வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க ஒவ்வொருவராக வருகின்றனர். அவர்களை வரவேற்று பாக்கியா ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க, விளக்கு ஏற்றலாமா என்று பாக்யா கேட்க பாட்டிக்கு ஒரு வாட்டி போன் பண்ணி பாருங்க என்று ஜெனி சொல்லுகிறார் அவங்க வர மாட்டாங்க என்று சொல்ல ஒருவாட்டி பண்ணி பார்க்கலாமே என்று கேட்க அதற்கு பாக்யா வர மாட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கோபி வந்து வாழ்த்து சொல்லுகிறார்.
மறுபக்கம் சுதாகர் நிதிஷிடம் இனியா கிட்ட ரெஸ்டாரண்ட்க்கு போக போறது இல்ல என்ற விஷயத்தை சொல்லிட்டியா என்று சொல்ல இல்ல அதுக்கப்புறம் தான் சொல்லணும் என்று சொல்லுகிறார் அது ஒரு ரெஸ்டாரன்ட் அதுக்கு போகணுமா என்று கேட்டு விட்டு இனியா வந்தவுடன் போகலாமா என்று கேட்க, நிதிஷ் இல்லை நம்ப சித்தப்பா உங்க வீட்டுக்கு போக போறோம் என்று சொல்லுகிறார் வீட்டுக்கு ஃபங்ஷனுக்கு எப்படி போகாம இருக்க முடியும் என்று இனியா கேட்க அதற்கு நிதிஷ் சித்தப்பா யூ எஸ் போறாரு அதுக்கு முன்னாடி பாத்துட்டு போகணும்னு சொல்றாரு என்று சொன்னவுடன் இனியா முகம் மாற நம்ப வேணும்னா ஈவினிங் போகலாம் என்று சொல்லி முடிவெடுக்கின்றனர். உடனே ஈஸ்வரி ரெஸ்டாரண்டுக்கு வர பாக்யா சந்தோஷப்பட்டு வரவேற்கிறார் உடனே பாக்யா பூஜையை ஆரம்பிக்கலாம் என்று சொல்ல செழியன் ஒரு விளக்கு ஏத்தி வையுங்க என்று சொல்ல ஈஸ்வரியும் விளக்கேற்றவற ஆனால் பாக்யா விளக்கேற்றி விடுகிறார் இதனால் ஈஸ்வரியின் முகம் மாறி பிறகு அமைதியாக நின்று விடுகிறார்.உடனே பாக்யா பூஜையும் அவரே செய்துவிட எழில் ரெஸ்டாரன்ட் பெயர் ரிவில் பண்ணலாமா என்று சொல்லி திறக்க பாக்கியலட்சுமி மெஸ் என இருப்பதை பார்த்துவிட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.
கொஞ்ச நேரத்தில் வெளியில் காபி குடித்துக் கொண்டிருக்க ஈஸ்வரி கோபியை கட்டாயப்படுத்தி இங்கிருந்து போகலாம் என்னால முடியல வேக்காடா இருக்கு மூச்சு கூட விட முடியல நீங்க எப்படி உட்கார்ந்து சாப்பிடுவாங்க என்றெல்லாம் கேட்டுவிட்டு நீ வரலனா எனக்கு ஆட்டோ புடிச்சு கொடு நான் போறேன் என்று சொல்லுகிறார் அப்படி எல்லாம் ஒன்னும் வேணாம்மா நானும் வரேன் என்று சொல்லிவிட்டு பாக்யாவிடம் கோபி அம்மா வீட்டுக்கு போவதாக சொல்றாங்க நான் கூட்டிட்டு போறேன் என்று சொல்ல சாப்பிட்டு போகலாமே என்று கேட்கிறார் இருக்கட்டும் பாக்யா பரவால்ல அவங்களுக்கு மூச்சு முற்ற மாதிரி இருக்குன்னு சொல்றாங்க அவங்களுக்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்லி அழைத்துச் செல்கிறார்.
மறுபக்கம் கொஞ்ச தூரம் காரில் சென்றவுடன் ஈஸ்வரி காரை நிறுத்த சொல்லி பாக்யா ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கானு தெரியல அவளுக்கு இன்னும் பக்குவமே வரல பக்குவம் வந்து இருந்தா சம்பந்தி கிட்ட ஏட்டிக்கு போட்டியா நிப்பாளா என்று கேட்க அது மட்டும் இல்லாம உன்ன ரெஸ்டாரன்ட் கூப்ட்டாளா இந்த மாதிரி இட்லி கடை திறக்கப் போற வான்னு சொன்னாளா என்று கேட்க இல்லம்மா என்று சொல்கிறார் அப்ப எதுக்கு நீ வந்த என்று கேட்க நீங்க கூட தான் வர மாட்டேன்னு சொன்னீங்க நீங்க எதுக்கு வந்தீங்க என்று கேட்கிறார் அவை என்ன கடை திறந்து இருக்கா என்னன்னு பாக்க தான் வந்தேன் என சொல்லுகிறார். இல்லம்மா எனக்குள்ள ஒரு கில்ட்டி ஃபீலிங் இருக்கு பாக்யா ரெஸ்டாரன்ட் வச்சு நல்லா பிசினஸ்மேனா உயர்ந்து வந்துகிட்டு இருந்தா ஆனா இனியாவோட கல்யாணத்தால அவளுக்கு கொடுத்த பிரஷர்ல தான் அவ இப்படி ஆயிட்டா என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி இனியா விஷயத்துல நீ பண்ணது தான் சரி இனியாவுக்கு நீ எப்படிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்க அவ எவ்வளவு சந்தோஷமா இருக்கா என்று சொல்லுகிறார் பாக்யாவை வாயால தான் அவ கெட்டுப் போறா என்று சொல்லுகிறார். சரி நான் எனக்கு பாக்யா பேச்சை எடுத்தாலே தலை வலிக்குது போகலாம் என்று முடிவெடுக்கின்றனர்.
பிறகு ஹோட்டலில் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க பாக்கியாவும் செல்வியும் சாப்பாடு பரிமாறுகின்றனர் செல்வி அமிர்தாவிடம் நிலா பாப்பாவ கூட்டிட்டு வந்திருக்கலாம் என்று சொல்லாத எங்க வெளியவே வரமாட்டேங்குறா என்று சொல்லுகிறார் உடனே ஜெனிடம் யாழினி பாப்பாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே என்று சொல்ல அதற்கு ஜெனி சரியாக முகம் கொடுத்து பேசாமல் வெயில் அதிகமா இருக்கு இல்ல அதனால தான் கூட்டிட்டு வரல என்று சொல்லி சொல்ல செல்வி ரசம் எடுத்துட்டு வரேன் என செஞ்சு விடுகிறார் உடனே பாக்யா ஜெனி இடம் நீ இன்னும் செல்வி மேல கோவமா இருக்கியா என்று கேட்க, அவங்களால வீட்ல எவ்வளவு பிரச்சனை வந்தது எல்லாம் மறக்க கொஞ்ச நாளாகும் ஆன்ட்டி என்று சொல்லுகிறார். பிறகு பாக்கியா என்ன சொல்லுகிறார்? ஜெனியின் பதில் என்ன? செழியன் என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
