அருனிடம் சிக்கிய முத்து, ஸ்ருதி அம்மா செய்த வேலை, ரோகினி கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
முத்து காரை அருண் வண்டியின் மீது மோதியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் கார்மேல் முட்டைகளைக் கொட்டி விட முத்துவும், மீனாவும் சேர்ந்து சுத்தம் செய்கின்றனர்.பிறகு முட்டை நாத்தம் வருவதால் முத்து என்ன செய்வது என்று புரியாமல் யோசிக்க ரவி வருகிறார். அது என்ன கழுவினாலும் அந்த ஸ்மெல் போகாது நான் போய் ஸ்பிரே எடுத்துட்டு வரேன்னு சொல்லி விட்டு கார் சாவியை வாங்கி காருக்குள் உள்ளே மற்றும் வெளியே ஸ்பிரே அடித்து விடுகிறார். மறுபக்கம் சிட்டி முத்துவை வாட்ச் பண்ணிக் கொண்டிருக்கும் இரண்டு ஆட்களுக்கு போன் பண்ணி என்ன நடந்தது என்று கேட்க அவன் கார் மேல முட்டையை கொட்டிடுச்சு கிளீன் பண்ணிக்கிட்டு இருக்கான் என்று சொல்லுகிறார்.
மறதியில் ரவி சாவியை எடுத்துக்கொண்டு சென்று விட உள்ளே வந்த முத்து மீனா விடம் சாவியை கேட்கிறார் நான் உங்ககிட்ட கொடுத்துட்டேன் என்று சொல்ல நீ என்கிட்ட கொடுக்கல என்று முத்து சொல்லுகிறார் எனக்கு உன்னை ஞாபக மறதி கிடையாது நீங்க நேத்து என்ன சட்ட போட்டு இருந்தீங்க அதுக்கு முன்னாடி நாள் இன்னும் சட்டை போட்டு இருந்தீங்கன்னு கூட எனக்கு தெரியும் என்று சட்டையின் கலரை சொல்லுகிறார் உடனே அப்ப நான் உள்ள வச்சிருப்பேன் என்று சொல்லி தேடுகிறார் ஆனால் உள்ளே சாவி இல்லாததால் அண்ணாமலை என்னாச்சு என்று கேட்கிறார் சாவி என் கிட்ட கொடுக்கவே இல்ல கொடுத்த சொல்றா என்று சொல்ல முதலில் என்ன நடந்துச்சுன்னு யோசிச்சு பாரு கரெக்டா தெரியும் என்று சொல்ல நாங்க ரெண்டு பேரும் கார் எடுக்க வெளியே போனோம் அப்போ மீனா ஓட பிரண்ட்ஸ் வந்தாங்க அதுக்கப்புறம் முட்டைய கிளீன் பண்ணனும் என்று சொல்லிக் கொண்டே வர பிறகு ஆமாப்பா ரவி வந்தான் ஸ்ப்ரே அடிக்கிறேன்னு சொன்னான் அவன் தான் எடுத்துட்டு போயிட்டான்னு நினைக்கிறேன் என்று சொல்லி ரவிக்கு போன் போட ரவியே வந்து நிற்கிறார்.
சாரிடா நான் மறந்து எடுத்துட்டு போயிட்டேன் என்று சொன்ன நல்ல வேலை பழைய தூக்கி என் மேல போட்டு இருக்காரு என்று சொல்ல, அண்ணாமலை சமாதானம் சொல்லி அனுப்பி வைக்கிறார் . முத்து கார் எடுக்க கார் ஸ்டார்ட் ஆகாமல் இருக்க என்ன ஆச்சுங்க என்று கேட்கிறார் பேட்டரில ஏதாவது பிரச்சனை இருந்தாலும் இப்படித்தான் ஆகும் என்று சொல்லி பிறகு ஸ்டார்ட் பண்ணி கிளம்புகிறார். கொஞ்ச நேரத்தில் முத்து சரியா பிரேக் பிடிக்க மாட்டேங்குது என்று யோசிக்க அந்த நேரம் பார்த்து சிட்டியின் ஆட்கள் முத்துவை வெறுப்பேத்த முத்து அதை எல்லாம் மறந்து உடனே அவர்களை வேகமாக பின் தொடருகிறார் ஒரு கட்டத்திற்கு மேல் வண்டியில் பிரேக் பிடிக்காமல் போனதால் முத்து என்ன செய்வது என தெரியாமல் பதட்டத்தில் காரை ஓட்டுகிறார் எதிரில் ஒரு ஸ்கூல் ஆட்டோ வர முத்து வேறு வழி இல்லாமல் வண்டியை திருப்ப அது அருணின் பைக்கில் மோதி நின்று விடுகிறது. கீழே விழுந்ததில் அருணின் பைக் சேதம் ஆகிவிட அவர் முத்துவின் மீது கோபமாக பேசுகிறார் நீ என்னோட வண்டிய வேண்டுமென்றே தள்ளிவிட்டு இருக்க என்று சொல்ல முத்து காரில் பிரேக் போன விஷயத்தை சொல்ல வர ஆனால் அருண் அதை எதுவும் கேட்க மறுக்கிறார்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதியின் அம்மா வீடியோ எடுக்கிறார். பிறகு முத்து காரில் பிரேக் பிடிக்காமல் போயிடுச்சு ஆட்டோவில் மோத கூடாது என்று தான் திருப்பன உங்க வண்டி இருக்கிறது எனக்கு சத்தியமா தெரியாது உங்க மேல கோவம் இருக்கிறதெல்லாம் உண்மைதான் ஆனால் இது தெரிஞ்சு பண்ணல என்று எவ்வளவு சொல்லியும் முத்துவின் பேச்சை கேட்காத அருண் அவரை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏத்தி விடுகிறார். இன்னொரு போலீஸ் இடம் இந்த கார் எடுத்துட்டு ஸ்டேஷனுக்கு வாங்க என்று சொல்ல முத்து அதுல பிரேக் இல்ல எடுக்காதீங்க என்று கத்துகிறார் ஆனால் எதுவும் கேட்காமல் அந்த போலீஸ்கார எடுக்கின்றனர். ஸ்ருதியின் அம்மா இந்த வீடியோ வச்சு ஏதாவது பிரச்சனை பண்ணிடலாம் என முடிவெடுத்து வீடியோவை எல்லாருக்கும் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார்.
மறுபக்கம் ரோகினி ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருக்க மனோஜ் வந்து நீ எதுக்கு இங்க வந்த என்று கேட்கிறார். அம்மா சொல்ற வரைக்கும் நீங்க வரக்கூடாது என்று தானே சொல்லி இருக்காங்க என்று சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. மனோஜ் என்ன சொல்லுகிறார்? அதற்கு ரோகிணியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
