மயங்கி விழுந்த சிங்காரம், சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 21-05-25
Moondru Mudichu Serial Today Promo Update 21-05-25

நேற்றைய எபிசோடில் சிங்காரம் நந்தினியிடம் ஒன்று நல்லா வாழனும் இல்லனா செத்துப் போயிடலாம் இந்த அளவுக்கு அழுதுகிட்டே வாழுற கொடுமை என்னால தாங்க முடியல என்று சொல்லி அழ நந்தினியும் கண்கலங்கி அழுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி செக்யூரிட்டி ஆபீஸ்சாரக்கு போன் பண்ணி ஏதாவது ஆள் மாத்தி இருக்கீங்களா என்று ஒன்றும் தெரியாது போல் கேட்க உடனே அந்த ஆபிசர் எதாவது பிரச்சனையா ஆயிடுச்சா என்று கேட்ட, அவர்தான் பர்ஃபெக்ட்டா வேலை பாக்குறாரு எக்காரணத்தைக் கொண்டு நான் சொல்லாம அவரை இந்த வீட்டில் இருந்து மாத்தாதீங்க இன்னைக்கு பகல் டியூட்டில வேலை செய்ய சொல்லுங்க என்று சொல்லி போனை வைக்க மாதவி சுரேகா எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்கமா என்று கேட்கிறார். உலகத்திலேயே அசிங்கம் எது தெரியுமா கண்ணெதிரே அவங்க அப்பா அசிங்கப்படுறது தான் அவன நான் கேவலப்படுத்துவதில் ஒரு நாள் பொறுத்துக்க முடியாம அவளே இந்த வீட்ட விட்டு போவா நடத்தி காட்டறேன் என சொல்லுகிறார்.

சரிப்பா நான் உள்ள போறேன் என்று சொல்ல, நீயும் கெளம்புப்பா என்று சொல்ல ஆள் வந்த உடனே தான் மாத்தி விட்டு போகணும் என்று சிங்காரம் சொல்ல நந்தினி அவர் வர வரைக்கும் நான் இருக்கேன் என சொல்ல செக்யூரிட்டி போன் போட்டு சுந்தரவல்லி அம்மா இல்ல பகல் டீயூட்டையும் பார்க்க சொல்லிட்டாங்க உனக்கு ஓடியும் கிடைக்கும் அதனால பார்த்துவிடு என்று சொல்லி ஃபோனை வைக்க, நந்தினியும் சரிப்பா ஒரு நாள் தானே நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று சொல்லிவிட்டு வர சூர்யா ரூமில் உங்கப்பா எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்காரு பணம் கொடுத்தா நீ வாங்க மாட்டேங்குற என்று சொல்ல எந்த வேலையும் அசிங்கம் இல்லை என்று சொல்ல, ஏற்கனவே உன்ன வீட்ல தரக்குறைவா பேசுறாங்க இதுல உங்க அப்பா வாட்ச்மேனா இருந்தா இன்னும் ஓவரா பேசுவாங்க என்று சொல்ல நான் கூடிய சீக்கிரம் வேற வேலை பார்த்துக்க சொல்லி இருக்கேன் மாத்திடுவாரு என்று சொல்லுகிறார்.

ஊர்ல இருந்தா கஷ்டம் தெரியாது இங்க குடிக்கிற தண்ணிக்கு கூட காசு எல்லாத்தையும் சமாளிக்கவில்லை என்று சொல்ல உங்க அப்பாவ செக்யூரிட்டி வேலைக்கு இந்த வீட்டுக்கு வர வெச்சது என் தாய்க்குலத்தோட வேலையா தான் இருக்கும் என்று சொல்ல, என்ன சார் சொல்றீங்க என்று கேட்க என்னதான் கட்டாயப்படுத்தி தாலி கட்டியிருந்தாலும் ஒரு நாளும் உங்க வீட்டு காசு பணத்துக்கு ஆசைப்பட்டது இல்ல ஆனா என்னை எதுக்கு இப்படி கஷ்டப்படுத்தணும் அவர் வயசானவரு அவர வர வச்சி எதுக்கு கஷ்டப்படுத்தனும் என்ற சொல்லி கண்கலங்க சூர்யா நான் பாத்துக்குறேன் நீ போ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். உடனே அருணாச்சலம் சிங்காரத்திடம் வந்து என்கிட்டயாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல சம்மந்தி வீட்ல வந்து வாட்ச்மேன் வேலை பார்த்தால் எல்லாருக்கும் அசிங்கம் தானே என்று சொல்ல, ஒரு வாரத்திலேயே முடிச்சுட்டு போயிடலாம்னு தான் பார்த்தேன் ஆனா இப்படி ஆயிடுச்சு என்று சொல்லுகிறார். நான் எல்லாரும் ஒரே குடும்பம் தான் நினைக்கிறேன் ஆனா நந்தினி அப்படி நினைக்க மாட்டேங்குற என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி வந்து ஒரே கண்கொள்ளாக் காட்சியா இருக்கு கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தமான கம்பெனிக்கு ஓனர் அவரோட சம்மந்தி வாட்ச்மேன் இந்த கண்கொள்ளா காட்சியை சினிமால கூட பார்க்க முடியாது என்று சொல்லுகிறார்.

நான் சொன்னதுல எந்த தப்பும் இல்லையே நீங்க வரும்போதும் போகும்போதும் சல்யூட் அடிக்கிறவருடைய பொண்ண தானே உங்க பையன் கல்யாணம் பண்ணி இருக்கான் என்று சொல்ல ஒருத்தர மூஞ்சிக்கு நேரா அசிங்கப்படுத்துவது உனக்கு சந்தோஷம் இல்ல என்று கேட்கிறார். நீ கோபப்பட வேண்டியால் சூர்யா ஆனா அவனைத் தவிர மீதி இளக்காரமா இருக்கிறவங்க கிட்ட கோபப்பட்டு கிட்டு இருக்க ஒன்று சொல்ல சுந்தரவல்லி அங்கிருந்து சென்று விடுகிறார். சுந்தரவல்லி ரூமில் இருக்க மாதவி என்னம்மா தனியா யோசிச்சிட்டு இருக்கீங்க என்று கேட்க, வெளிய ஒக்காந்துட்டு இருக்கிற கிழவனுக்கு அடிக்கிற அடியில இவளுக்கு கண்ணீர் வரணும் என்று சொல்ல, பேதி மாத்திரை கலந்து கொடுத்து விடலாமா என்று கேட்க, சின்ன புள்ளத்தனமா யோசிக்காத என்று சொல்ல, உடனே மாதவி இந்த வேகாத வெயிலில் நாலஞ்சு வாட்டி கடைக்கு அனுப்புவோம் மயக்கம் போட்டு விழுந்துருவான் என்று சொன்ன உனக்கு ஐடியா எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா அதுல ஏதோ ஒன்னு மிஸ் ஆகாது என்று செக்யூரிட்டிக்கு போன் பண்ணி கொஞ்ச நாளா ரெண்டு வாட்டி திருடன் வந்துட்டாங்க அதனால மொட்டை மாடியில் செக்யூரிட்டி வேலை பாக்க சொல்லுங்க என்று சொல்லிப் போன வைக்கிறார். அவ அப்பா அவ முன்னாடி அசிங்கப்படணும் அதுதான் நடக்கணும் அடிக்கிறது இல்ல மொட்ட மாடியில நின்னு மயக்கம் ஆவது போடணும் என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்.

சிங்காரத்திற்கு செக்யூரிட்டி ஆபிஸர் போன் போட்டு என்னையா பண்ண ஒரு செக்யூரிட்டிக்காக சுந்தரவல்லி மேடம் இத்தனை வாட்டி போன் பண்ணி இருக்காங்க என்று சொல்ல நான் எதுவும் பண்ணலையா என்று சிங்காரம் பயப்பட உடனே பயப்படாத உன்ன பகல்லையும் டியூட்டி பார்க்க சொல்லி இருக்காங்க அவங்க வீட்டுக்கு ரெண்டு மூணு வாட்டி திருடன் வந்திருக்காங்களாம் அதனால உன்னை மொட்டை மாடியில் இருக்க சொல்லி இருக்காங்க நீ அங்க போய் வேலையை பாரு என்று சொல்ல என்னையா வெயில் அதிகமா இருக்கு எப்படி போக முடியும் என்று கேட்க, என்னையா ஏசி ரூம் வேணுமா என்று கேட்டுவிட்டு போய் டூயூட்டியை பார்க்கச் சொல்லுகிறார். உடனே சிங்காரம் என்ன நடக்கப் போகிறதோ என்று நினைத்துக் கொண்டே நந்தினியை வந்து பார்க்கிறார்.ரெண்டு வாட்டி திருட்டுப் பசங்க வந்ததுனால மேல போய் ஏதாவது வழி இருந்தால் பார்த்து அடைக்க சொல்லி இருக்காங்க என்று நந்தினியிடம் சொல்லி சமாளித்து விட்டு மேலே சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சிங்காரத்தை பார்க்க மேலே வர மயங்கி கிடப்பதால் பதறிப் போய் நந்தினி எழுப்ப சத்தம் கேட்டு சூர்யா வந்து உதவி செய்கிறார். பிறகு உள்ளே வந்து ஒரு வயசானவரு டாடி மயங்கி கிடக்கிறார் இன்னும் கொஞ்ச நேரம் விட்டு இருந்தா செத்துப் போயிருப்பாரு என்று சொல்லுகிறார்.

உன்ன மொட்டை மாடி அனுப்புனது வேணும்னே பண்ணி இருக்காங்கன்னு தோணுதுப்பா என்று சொல்ல என்னம்மா சொல்ற வேணும்னேவா என்று கேட்க ஆமாபா என்று நந்தினி சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 21-05-25
Moondru Mudichu Serial Today Promo Update 21-05-25