ரோகினி விரித்த வலை.. சிக்கினாரா விஜயா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
விஜயாவை சமாதானப்படுத்த ரோகினி நகையை கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி ரவியிடம் நீ அந்த ரெஸ்டாரண்டுக்கு வேலைக்கு போக வேணாம் நீ வேற ஏதாவது ரெஸ்டாரன்ட் போ, அந்த நீத்து அவளால மட்டும் தான் எல்லாமே ஆச்சுன்னு நினைக்கிறா என்று சொல்ல இப்ப நான் போல என்றால் என்ன வேற ஒருத்தர் வந்து வேலை செய்ய போறாங்க என்று சொல்ல வேற ஒருத்தர் வரட்டும் அப்பதான் உன்னோட அருமை தெரியும் என்று சொல்ல ரவி அப்படி எல்லாம் இருக்க முடியாது ஸ்ருதி நான் வேலைக்கு கிளம்புறேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் சீதா அருணை சந்திக்க வீட்டுக்கு வர அருன் அம்மா சோகமாக இருப்பதால் என்னாச்சுமா என்று கேட்க மீண்டும் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க என்று சொல்லுகிறார் அருண் எங்கே என்று கேட்க உள்ளே தான் இருக்கான் என்று சொன்னவுடன் சீதா விசாரிக்க அருண் நடந்த விஷயங்களை சொல்லுகிறார் உங்க ரெண்டு பேருக்கும் 7 ஜென்மம் பகை இருக்கும் போலையே என்று கிண்டல் அடிக்க சரி இந்த சஸ்பெண்ட நம்மளுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கலாம் நான் அக்கா மாமாவை பார்க்க ஏற்பாடு பண்றேன்னு சொல்ல அருண் சந்தோஷப்பட்டு சிரிக்கிறார். உடனே இருவரும் சந்தோஷமாக பேசிக்கொள்வதை பார்த்து அருண் அம்மா நிம்மதி அடைகிறார். சீதாவின் அம்மா கோவிலில் எதையோ யோசித்துக் கொண்டே பூக்கட்டிக் கொண்டிருக்க மீனா வருகிறார். என்னமா யோசிச்சிட்டு இருக்க என்று கேட்க சீதா முன்ன மாதிரி இல்ல ரொம்ப நேரம் போன் பேசுற சாப்பிடும்போது மெசேஜ் பண்ற ஆனா கேட்டா ஹாஸ்பிடல் இருந்து பண்ணாங்க அப்படின்னு சொல்றா தினமும் வர நேரத்தோட ஒரு மணி நேரம் லேட்டா வர எனக்கு என்னமோ தப்பா இருக்கணும்னு பயமா இருக்கு என்று சொன்ன சீதா அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்ப அந்த நேரம் பார்த்து வந்து விடுகிறார் உடனே நீ போய் சாப்பிடுமா என்று சொல்லி சந்திராவை அனுப்பி வைக்க சீதா உன்கிட்ட நானே தனியா பேசணும்னு நினைச்சேன் அக்கா நாளைக்கு என்னோட ஹாஸ்டல் பக்கத்தில் இருக்கிற கோவிலுக்கு நீயும் மாமாவும் வந்துருங்க நான் அவரை கூட்டிட்டு வரேன் என்று சொல்லுகிறார் மீனாவும் சரி என சம்மதிக்கிறார்.
வீட்டில் அனைவரும் காபி குடித்துக் கொண்டிருக்க ரோகினி வந்து நிற்க விஜயா எங்க போயிட்டு வரேன் என்று கேட்கிறார் ஒரு கிளைன்ட் ஆர்டர் வந்தது அதுல காசு கொஞ்சம் வந்ததால உங்களுக்கு ஒரு பழைய மாடல் செயின் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார். உடனே ரவி, சுருதி இருவரும் ரவி வாங்க மாட்டாங்க என்று சொல்ல உங்க அம்மா வாங்குவாங்க ஐநூறு ரூபா பெட் என்று சொல்ல ரோகிணி விஜயாவிடம் வாங்கிக்கோங்க ஆன்ட்டி உங்களுக்கு சூப்பரா இருக்கும் நன்றி சொல்ல நான் எதுக்கு வாங்கணும் என்று கேட்கிறார். நீ நகையை கொடுத்த உடனே பல்ல காட்டிகிட்டு வாங்கிடுவேன்னு நெனச்சியா மலேசியான்னு சொல்லி ஏமாத்துனவ தானே நீ, இப்போ இந்த நகையை வாங்கிட்டு வரேன்னா என்ன அர்த்தம் என்று சொல்ல உங்கள கவுக்க தான் என்று சுருதி சொல்லுகிறார் அவளை எதுக்கு முறைக்கிற, அவ உண்மையை தானே சொல்றா என்று சொல்ல இது உங்களுக்கு நல்லா இருக்கும் என்று சொல்லிவிட்டு டேபிளில் வைத்து விட்டு சென்று விடுகிறார். உடனே மனோஜ் எடுக்க போக விஜயா என்ன சொல்லுகிறார்? முத்து மீனா என்ன சொல்லுகிறார்? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
