சூர்யா செய்த செயல், கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் மினிஸ்டருக்கு போன் போட்டு அந்த பொண்ணு இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சிட்டாங்க என்று சொல்ல என்னையா சொல்ற என்று கேட்கிறார். எல்லாமே முடிச்சு கையெழுத்து போடுற நேரத்துல வெளியே இருந்து வந்து கார்ல்ல சத்தம் கேட்குதுன்னு சொல்லி கூப்பிட்டு கண்டுபிடிச்சிட்டாங்க இப்ப அந்த பொண்ண ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க என்று சொல்ல மினிஸ்டர் டென்ஷன் ஆகிறார் இதைக் கேட்டு அர்ச்சனா அதுக்கு தான் அவல அப்பவே முடிச்சிடலாம்னு சொன்னேன் என்று சொல்லுகிறார். உடனே மினிஸ்டர் இப்போ நந்தினி மட்டும்தான் அங்க போயிருக்கா மீதி பேர் எல்லாம் இங்க தான் இருக்காங்க என்று சொல்ல ஆமா சார் இப்பயும் சூர்யா அவங்க அம்மா தான் கடத்திருப்பாங்கன்னு உறுதியா சொல்லிக்கிட்டு இருக்கான் என்று சொல்ல உடனே நந்தினி அங்க வரதுக்குள்ள வேலையை முடி என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் நந்தினி கண் முழிக்க சிங்காரத்திடம் சொல்ல அவர் அழுது கொண்டே உள்ளே வந்து நந்தினி இடம் நலம் விசாரிக்கிறார். என்னாச்சும்மா என்று கேட்க நந்தினி வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு என்னென்னலாம் நடந்ததோ அதை ஃபுல்லா சிங்காரத்திடம் சொல்லுகிறார். சிங்காரமும் சூர்யா சுந்தரவல்லியின் மீது கம்ப்ளைன்ட் கொடுக்கப் போகும் விஷயத்தை நந்தினியிடம் சொல்லுகிறார். உடனே நந்தினி என்ன கடத்துனது அவங்க இல்லப்பா அந்த ரெண்டு திருட்டு பசங்க தான் இதை போய் நம்ம உடனே சொல்லணும் என்று அங்கு கிளம்புகின்றனர்.
இன்ஸ்பெக்டர் சுந்தரவல்லி இடம் கையெழுத்து வாங்க கூப்பிடும் நேரத்தில் கரெக்டாக நந்தினி நிறுத்துங்க என சொல்லி உள்ளே வருகிறார். என்ன கடத்துனது அவங்க இல்ல அவங்க எந்த தப்பும் பண்ணல என்று சொல்லுகிறார். என்ன கடத்தினவர்களை எனக்கு நல்லா தெரியும் இப்போ காமிச்சா கூட நான் அவங்கள கரெக்டா அடையாளம் சொல்லுவ நீங்க அவங்கள கண்டுபிடிங்க என்று சொல்லுகிறார் நந்தினி. அருணாச்சலம் இப்பயாவது கேச வாபஸ் வாங்கு சூர்யா என்று சொல்ல என்னால முடியாது என்று சொல்லுகிறார். அருணாச்சலம் ஒரு கட்டத்திற்கு மேலே டென்ஷன் ஆக என்ன நெனச்சுக்கிட்டு இருக்க சூர்யா என்று திட்டுகிறார். நந்தினிய கடத்த இவங்களே ஆள ரெடி பண்ணி வச்சிருப்பாங்க நான் அதுல உறுதியா இருக்கேன் என்று சூர்யா சொல்லுகிறார்.
உடனே நந்தினி அப்போ நான் சொல்ற கம்ப்ளைன்ட் எடுத்துக்கோங்க நான் சொல்றவங்கள தவிர இவரு வேற யாரையாவது கம்ப்ளைன்ட் கொடுத்தா அதை ஏத்துக்காம என்ன கடத்தினவர்களை கண்டுபிடித்து கொடுக்கணும் என்பதை எழுதிக்கோங்க என்று சொல்ல அருணாச்சலம் உடனே இன்ஸ்பெக்டர் இடம் இது போதுமா என்று கேட்டு ரிலீஸ் பண்ணுவீங்களா என்று சொல்லுகிறார். சரி ரிலீஸ் பண்ற என்று சொல்ல உடனே சுந்தரவல்லி எவளோ ஒருத்தி பிச்சை போட்டு நான் ரிலீஸ் ஆகணுமா என்னால முடியாது நீங்க என் மேல கேஸ் போடறீங்களோ போடுங்க நான் வக்கீல் வச்சு பாத்துக்குறேன் என்று சுந்தரவல்லி உட்கார்ந்து விடுகிறார். உடனே அருணாச்சலம் உன்னோட ஈகோக்கு இது நேரம் கிடையாது என்று சுந்தரவல்லி கூப்பிட அவர் வராமல் அங்கேயே இருக்கிறார். இவர் காணாமல் போவா போலீஸ் வந்து என்ன கேட்பாங்க டிக்கில இருப்பா அப்புறம் இங்க வந்து நிப்பா ஆனா இதுக்கெல்லாம் யாரு காரணம்னு தெரிஞ்சுக்காம நான் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று சொல்லி உட்கார உடனே இன்ஸ்பெக்டர் போனை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறார்.
உடனே மினிஸ்டர்க்கு போன் போட நம்ப ஒன்னு நெனச்சா இங்க ஒன்னு நடக்குது சார் என்று சொல்லுகிறார். உடனே அர்ச்சனா போன் வாங்கி என்ன ஆச்சு என்று கேட்க நந்தினி வந்து கடத்தினதுக்கு சுந்தரவல்லி காரணம் இல்லை என்று சொன்னதனால் எல்லாமே சீக்கிரமா நடந்து முடிஞ்சிடுச்சு. ஆனா சூர்யா உறுதியா இருக்கிற இப்போ அது பிரச்சனை இல்ல ஆனா சுந்தரவல்லி என் மேல கேஸ் போடுங்க நான் வக்கீல் வச்சு பேசுகிறேன் இந்த கடத்தல் கேஸ்ல யார் இருக்காங்கன்னு நான் தெரிஞ்சுக்கணும் என்று சொல்றாங்க என்று மினிஸ்டரிடம் சொல்ல அவர் சுந்தரவல்லி பதவியில் வேணா இல்லாம இருக்கலாம் அவங்க எல்லாத்துக்கும் கையில் ஆள் வச்சிருக்காங்க அதனால எதுவும் சொல்லாம பேச முடிச்சிடலாம்னு சொல்லி அவங்கள அனுப்பி வச்சுடுங்க என்று சொல்லி போனை வைக்கிறார்.
உடனே உள்ளே வந்த போலீஸ் வக்கீல் இடமெல்லாம் பேச வேண்டாம் இப்பதான் நான் உயர் அதிகாரி கிட்ட பேசிட்டு வந்தேன் சூர்யாவோட கேஸ் எடுத்துக்க முடியாது நந்தினி கொடுக்கிற கம்பெனி மட்டும்தான் என்று சொல்ல மத்தபடி நீங்க எல்லாரும் கிளம்பிடுங்க என்று அனுப்பி வைக்கிறார் நந்தினி இடம் கம்ப்ளைன்ட் எழுதி வாங்குகிறார் பித்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவின் அருணாச்சலம் நந்தினையும் சூர்யாவையும் கோயிலுக்கு மாலை உடன் அழைத்துச் சென்று மாலை மாற்றிக் கொள்கிறார் இதனால் நந்தினி ஐயா எங்களுக்கு சேர்த்து வைக்கணும்னு நினைக்கிறாரு ஆனால் சுந்தரவல்லி அம்மாவோட வெறுப்ப பார்க்கும்போது ரொம்ப பயமா இருக்கு என்று சொல்லுகிறார்.
சூர்யா காரில் நந்தினி சூர்யா என்று பெயர் எழுதி இருப்பதை பார்த்து சுந்தரவல்லி கடுப்பாகிறார். இதனால் நந்தினி இதெல்லாம் இனிமேல் பண்ணாதீங்க என்று கையெடுத்து கும்பிட்டு சூர்யாவிடம் கேட்கிறார்.என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.