கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்துவதற்காக நிர்வாணக்காட்சியில் நடித்தேன்: நடிகை திவ்ய பிரபா பதிலடி
இந்திய சினிமா வரலாற்றில் கலையின் நுட்பத்தை ரசிப்பவர்கள் மிகக் குறைவு தான். அறிவியலின் வளர்ச்சியில் உணர்வியல் புரிந்து கொள்ளாமலே போய் விடுகிறது. அப்படியொரு நிகழ்வு தான் நடிகை திவ்ய பிரபாவுக்கும். ஆம், இதோ ஓர் நிகழ்வு காண்போம்..
இயக்குநர் பாயல் கபாடியா இயக்கத்தில் வெளியான படம் All We Imagine as light. இந்தப் படத்தில் கனி குருஸ்தி, சாயா கதம், திவ்ய பிரபா மற்றும் ஹிருது ஹாரூன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் கேரளாவில் இருந்து மும்பைக்கு, நர்ஸ் வேலைக்காகச் செல்லும் இரண்டு பெண்களை மையப்படுத்தி விவரிக்கப்படுகிறது.
இதில், ஒரு பெண் மிகவும் அமைதியானவர் அதே நேரத்தில், தனது வாழ்க்கையில் மிகவும் கட்டுப்பாடுடன் இருப்பவர். மற்றொரு பெண் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல், தனது வாழ்க்கையினை மிகவும் அனுபவித்து வாழவேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர். இவர்களின் வாழ்க்கை திரைக்கதையாக வார்க்கப்பட்டிருக்கிறது.
படத்தில் நடிகை திவ்ய பிரபா பல ஆண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளில் நடித்தார். சில காட்சிகளில் நிர்வாணமாகவும் நடித்தார்.
இந்தப் படம் பிரான்ஸில் நடைபெற்ற 77-வது கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உயரிய விருதான ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்றது. பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால், படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது.
இச்சூழலில், சில பக்குவமில்லாத இந்திய ரசிகர்களால் திவ்யா பிரபா நிர்வாணமாக நடித்த காட்சிகள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்தக் காட்சிகளைப் பார்த்தவர்களில் சிலர் கடுமையாக, மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், திவ்ய பிரபா விமர்சகர்களுக்கு பதில் அளிப்பதை விடவும், பதிலடி கொடுத்துள்ளார். ‘நான் ஒரு படத்தில் நடிக்கின்றேன் என்றால், அந்தப் படத்தின் கதையைப் புரிந்துகொண்டு, எனது கதாபாத்திரத்தினை பிடித்துத்தான் நடித்து வருகின்றேன். அப்படித்தான், படத்திலும் எனது, கதாபாத்திரத்தினை புரிந்து நடித்தேன்.
எனது கதாபாத்திரம் தொடர்பாக சிலர் கமெண்ட் செய்வதை கவனித்துதான் வருகின்றேன். இவர்கள் மொத்த ரசிகர்கள் பட்டாளத்தில் வெறும் 10 சதவீதம் பேர்தான். இவர்களின் கமெண்ட் என்னை எந்த வகையிலும் பாதிக்காது.
நான் ஏற்கனவே பல படங்களில் நடித்து புகழும் விருதுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ளேன். அப்படியான எனக்கு விளம்பரத்திற்காகவோ, பணத்திற்காகவோ இந்தப் படத்தில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
படத்தின் தேவைக்காக கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்துவதற்காக நிர்வாணக் காட்சியில் நடித்தேன்’ என கூறியுள்ளார். இவரது பதிலடி, பலரது கவனத்தினை ஈர்த்து வைரலாகி வருகின்றது.
பொதுவாக, பார்க்கும் கோணம் தவறானால் காணும் காட்சியும் பிழையாகத் தானே தெரியும்.!