எனக்கு பிடித்த மாதிரி ‘ராஜா சாப்’ படத்தில் பிரபாஸ் உள்ளார்: மாளவிகா மோகனன்

Web Ads

மெகா மாஸ் நடிகராக வலம் வரும் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ராஜா சாப்’ படம் குறித்து, மாளவிகா மோகனன் அப்டேட் கொடுத்துள்ளார். அது குறித்துப் பார்ப்போம்..

‘ராஜா சாப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு பிரபாஸின் 45-வது பிறந்த நாளில் ரிலீஸ் செய்தது. அதில், “ஹாரர் தான் புதிய நகைச்சுவை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், போஸ்டரில் வயதான கதாபாத்திரத்தில் பிரபாஸ் உள்ளார். கையில் சுருட்டுடன் காணப்படும் அவர், பார்க்கவே மாஸான லுக்கில் உள்ளார்.

மாருதி இயக்கும் இப்படம், திகில் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பீப்பிள் மீடியா பேக்ட்ரி தயாரிக்கின்றது.

இரு வேறு தோற்றங்களில் பிரபாஸ் நடிக்கின்றார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Web Ad 2

தமிழில் ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா தற்போது மலையாளம், ஹிந்தி படங்களிலும் நடித்து இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார்.

குறிப்பாக, அண்மையில் வெளியான ‘தங்கலான்’ படத்தில் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். படத்தில் ‘லைவ் சவுண்ட்’ என்பதால் இவரது வசன உச்சரிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்நிலையில், இன்று டிசம்பர் 1-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்ட மாளவிகா ‘ராஜா சாப்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் சிறப்பாக வந்துகொண்டு உள்ளது.

மேலும், எனக்குப் பிடித்த பிரபாஸ் இந்தப் படத்தில் உள்ளார். ‘ராஜா சாப்’ எனது முதல் தெலுங்கு படம் என்பதால், நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்’ என தெரிவித்துள்ளார். அதைவிடவும், ரசிகர்கள் இப்பட ரிலீஸ் தேதியை ஆவலாய் எதிர்பார்த்துள்ளனர்.