நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையும் கூட்டணி.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று சொல்லலாம்.
ஆனால் இது ஒரு புறம் இருக்க சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு விருந்தாக நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது 34 வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மணிரத்தினம் ரஜினிகாந்த்தை வைத்து தளபதி என்ற படம் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.