Web Ads

சூர்யா கொடுத்த அங்கீகாரம்..அருணாச்சலம் சொன்ன வார்த்தை,மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru mudichu serial episode update
Moondru mudichu serial episode update

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி சூர்யா சொன்ன விஷயத்திற்கு ஒத்துக்கொள்ளாததால் சூர்யா என்னோட முடிவில் மாற்றமில்லை என்று சொல்ல நீங்க ரெண்டு பேர் இப்படி சொன்னா எப்படி ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தால் தானே என்று கேட்கிறார். சூர்யா எனக்கு கை அடிபட்டு இருக்கு ஜஸ்ட் மூணு மாசத்துக்கு நந்தினி கையெழுத்து போட போற அவ்வளவு தானே என்று கேட்க மாதவி இவன் அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போறான் என்று சொல்ல சுரேகா அவளை வீட்டை விட்டு விட்டு அனுப்புவது ரொம்ப கஷ்டம் என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி ஏற்கனவே இவை இந்த வீட்டுக்கு வந்ததில் எங்களுடைய பாதி கௌரவம் போயிடுச்சு இதெல்லாம் இவ நான் கையெழுத்து போடுற இடத்துல இவ போட்டா என்னோட மரியாதை என்ன ஆகிறது என்று கேட்க என்று கேட்க லாயர் நான் சொல்ற நீனு தப்பா நினைச்சுக்காதீங்க சூர்யா தம்பி எடுத்த முடிவில் எந்த தப்பும் இல்லை. அவரு வைஃப் ஏதோ ஒன்னு செய்யணும்னு நினைக்கிறாரு அது எதுக்கு நீங்க தடுக்குறீங்க என்று கேட்கிறார்.

உங்களுக்குள்ள ஆயிரம் ஓடிக்கிட்டு இருக்கும் ஆனா கம்பெனி விஷயத்துல வீட்டு பிரச்சனையை எடுத்துக்கிட்டு வராம இருக்கிறது நல்லது என்னோட ஒப்பினியனை சொல்லிட்டேன் இதுக்கு அப்புறம் உங்க விருப்பம் என்று சொல்ல மத்தவங்க கிட்ட கேளுங்க என்று சுந்தரவல்லி சொல்ல அருணாச்சலம் சம்மதம் தெரிவிக்கிறார். எல்லார்கிட்டயும் கேட்டீங்க நான் என்கிட்ட கேட்கல எனக்கு இதுல சம்மதம் இல்லை என்று சொல்ல, என்ன சூர்யா இது என்று கேட்க, ஒரு நிமிஷம் சார் என்று சொல்லி விட்டு நந்தினி இடம் எதுவும் சொதப்பாத நீ எதுக்காகவும் பேசாத, நீ என்ன நம்புறியா இல்லையா என்று கேட்க நம்புகிறேன் என்று சொன்னவுடன் அப்போ ஒத்துக்கோ என்று சொல்ல நந்தினியும் சரி என சொல்லுகிறார். சுந்தரவல்லி இடமும் நந்தினி இடமும் கையெழுத்து வாங்கிவிட்டு அவர்கள் சென்று விடுகின்றனர்.

நந்தினி இதுக்கு மேல நீ சாதாரண ஆள் கிடையாது. ஏ ஆர் குரூப்ஸ் கம்பெனியோட சைனிங் அத்தாரிட்டி நீ கையெழுத்து போட்டா தான் எல்லாருக்கும் சம்பளமே கொடுக்க முடியும் என்று சொல்ல, அனைவரும் கடுப்பாகின்றனர். இதுக்கு எனக்கு தகுதி இல்ல சார் என்ன விட்டுடுங்க என்று சொல்ல, நடக்க வேண்டியதெல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு இதுக்கு மேல நீ இருக்கும் கவலைப்படாதே என்று சொல்லுகிறேன். உடனே சுந்தரவல்லி என் அசிங்கப்படுத்துறதா நினைச்சு பண்ற இல்ல யார அசிங்கப்பட போறாங்கன்னு நீயே பார்ப்ப என்று சொல்லிவிட்டு சென்றுவிட அருணாச்சலம் சூர்யாவை தனியாக அழைத்துச் சென்று பேசுகிறார். நீ பண்ணது ரொம்ப பெரிய விஷயம் சூர்யா.இது நந்தினி பட்ட கஷ்டத்துக்கு ஒரு கௌரவத்தை கொடுத்து இருக்க, நந்தினிக்கு தெரியலனாலும் நீ சொல்லிக் கொடு, மறுபடியும் நந்தினி இந்த வீட்டை விட்டு போகணும்னு சொல்லக்கூடாது. நீ சொன்னது ரொம்ப நல்ல விஷயம் சூப்பர் என்று பாராட்டுகிறார்.

அருணாச்சலம் வெளியில் பார்த்துக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் காரில் சாமியாருடன் சாமியார் ஒருவர் கலசத்துடன் வர உள்ளே வைக்க பூஜை செய்கிறார். என்ன விஷயம் போன் பண்ணி வர சொல்லி இருக்கீங்க என்று கேட்க, உங்களுக்கு தெரியாததா பணம் காசுக்கு பிரச்சனை இல்லை ஆனால் மனசுக்கு நிம்மதி இருக்க மாட்டேங்குது. எனக்கு இருக்கிற ஒரே மனக்கவலை என்னோட மகன் சூர்யாவும் மருமகன் நந்தினியும் சந்தோஷமா சேர்ந்து வாழணும் என்று சொல்லுகிறார். நீ எதுக்கும் கவலைப்படாத அப்பன் முருகன் எல்லாத்தையும் பார்த்துப்பான் என்று சொல்லிவிட்டு எனக்கு ஒரு விஷயம் தோணுது குண்டத்து காளியம்மன் கோவில் திருவிழா நடக்கப்போகுது நீங்க குடும்பத்தோட போயிட்டு வாங்க அதுலயும் குறிப்பா சம்பந்தப்பட்ட உங்களோட மகனையும் மருமகளையும் கூட்டிட்டு போங்க மத்தவங்க பரவால்ல என்று சொல்ல ரொம்ப சந்தோஷம் கூட்டிட்டு சாமி கூட்டிட்டு போகிறேன் என்று சொல்ல அவர்களை வழி அனுப்பி விட்டு வருகிறார்.

நந்தினி பெரியவர் என்ன சொன்னார் என்று கேட்க காளியம்மன் கோவிலுக்கு போக சொல்லி இருக்காரு என்று சொல்ல, உங்க வீட்ல பிரச்சனை வந்துகிட்டு இருக்கு, அதுவும் குறிப்பா உனக்கும் சூர்யாவுக்கும் மட்டும் வருது. நைட்ல படுக்கும்போது கெட்ட கெட்ட கனவா வருது என்று சொல்ல, நீங்க அதுவே யோசிக்கிறதுனால உங்களுக்கு அப்படி இருக்கும் என்று சொல்லுகிறார். சூர்யாவும் குடிய விடமாட்டேங்குறான் அந்த குண்டத்துல இறங்கி ஆகுது அவ குடியை விட மாட்டான் நானும் தோணுது என்று சொல்ல, நீ என்னம்மா சொல்ற என்று கேட்க நந்தினி தாராளமா போயிட்டு வரலாம் ஐயா என்று சொல்லுகிறார் சரி வீட்ல இருக்குறவங்க கிட்ட பேசலாம் என்று அனைவரையும் வரவேற்று உட்கார வைத்து கோவிலுக்கு போகப்போகும் விஷயத்தை சொல்லுகிறார். உடனே சுரேகா போறது போறோம் ஒரு பக்கம் திருப்பதி ஒரு கோவான்னு போகலாமா என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம். நான் ஒன்னும் சும்மா சொல்லல சூர்யா உயிருக்கு ஆபத்து வர மாதிரி கனவு வருது அதுக்காக தான் சாமியார் கிட்ட கேட்டேன் அவரும் உயிர் ஆபத்து இருக்கு என்று சொல்லி கோவிலுக்கு போக சொல்லி இருக்காரு என்று சொன்னவுடன் சுந்தரவல்லி உடனே போயிடலாம் என்று சொல்ல, சூர்யா அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னவுடன் அருணாச்சலம் நந்தினியோட உயிருக்கும் ஆபத்திற்கு என்று சொன்னவுடன் என் பொண்டாட்டி உயிருக்கு ஆபத்தா உடனே போகணும் என்று சொல்லி அனைவரும் குடும்பமாக கோவிலுக்கு கிளம்புகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Moondru mudichu serial episode update
Moondru mudichu serial episode update