விஜயாவுக்கு பயத்தை காட்டிய ரோகினி, மீனா எடுக்கப் போகும் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
சாமியாரை வைத்து ரோகிணி விஜயாவுக்கு பயம் காட்ட, மறுபக்கம் சீதா விஷயத்தில் மீனா என்ன முடிவெடுக்க போகிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் சீதாவையும்,மீனாவையும் ரெஸ்டாரண்டில் சந்தித்து அவர்கள் அம்மா பெண் பார்க்கும் விஷயத்தை சொல்ல சீதா கண்கலங்குகிறார் இதுக்கு வேற வழியே இல்ல நாங்க ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் தான் பண்ணிக்கணும் அதுக்கு நீங்க தான் உதவி பண்ணனும் எங்களை புரிந்து கொள்ள வரைக்கும் எங்க அம்மாவுக்கும்,உங்க புருஷனுக்கு இது தெரிய வேணாம் என்று சொல்ல மீனா யோசிக்கிறார்.சீதா அப்பா இருந்தா என்ன அருணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாரு என்று பேசியதை நினைத்துப் பார்த்துவிட்டு என் புருஷனை மீறி நான் எந்த விஷயத்தையும் செஞ்சது கிடையாது எனக்கு யோசிக்கிறதுக்கு டைம் கொடுங்க என்று சொல்லி விடுகிறார்.
மறுபக்கம் விஜயா சாமியாரை சந்திக்க வர ரோகிணி மறைந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார் வந்து உட்கார்ந்தவுடன் நான் தாயத்து கொடுத்தது தப்பா ஆயிடுச்சு முதல்ல அந்த தாயத்தை கழட்டுங்க என்று சொல்லி மனோஜ் கையில் இருக்கும் தாயத்தை கழட்டி கொடுத்து விட கொஞ்ச நேரத்தில் சாமியார் விஜயா மீது விபூதியை எடுத்து அடிக்கிறார். உங்க வீட்டு வாசல்ல எமதர்மராஜா பாச கயிறு ஓட காத்துக்கிட்டு இருக்காரு என்று சொல்லுகிறார்.
உங்க உயிரை காப்பாத்தி கிட்டு இருக்கிறது உங்களோட மூத்த மருமக தான். அவங்களால தான் நீங்க உயிரோட இருக்கீங்க அவங்க இல்லாத வாழ்க்கையில சந்தோஷமா இருக்கணும் இல்லனா உங்க உயிருக்கு ஆபத்து அது மட்டும் இல்லாமல் நீங்க நைட்ல தூங்கும்போது சிகப்பு கலர் புடவை கட்டிக்கிட்டு தான் தூங்கணும் என்று சொல்ல, இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரோகினி சந்தோஷப்பட விஜயா எதுவும் பேச முடியாமல் அமைதியாக வெளியே வந்து விடுகிறார்.
வெளியில் வந்தவுடன் எனக்கு என்னமோ யாரோ இதெல்லாம் காசு கொடுத்து சொன்ன மாதிரி இருக்கு அவளால என் உயிர் பாதுகாப்பாக இருக்குமா என்றெல்லாம் யோசிக்க உடனே மனோஜ் அவரிடத்தில் வந்து அவரையே சந்தேகப்படுற மாதிரி பேசாதீங்கம்மா.அவர் ஏதாவது சாபம் கொடுக்கிற போறாரு என்று சொல்லுகிறார். உடனே பார்வதியும் உனக்கு கெட்டது நடக்கப்போவது என்று அவரே கூப்பிட்டு சொல்லி இருக்காரு நீ நைட்ல சிவப்பு சேலை கட்டிக்கோ என்று சொல்ல இதுல ஏதோ தப்பா இருக்கு நான் பாத்துக்குறேன் நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். உடனே ரோகினி சாமியாரை சந்தித்து நன்றி சொல்லிவிட்டு பணம் கொடுக்க வேணாமா நீ சந்தோஷமா இரு என்று சொன்னவுடன் கிளம்ப போக மீண்டும் ரோகினியை கூப்பிட்டு இதெல்லாம் விட நீ குடும்பத்துக்கு உண்மையாய் இருந்தால் அதுதான் உன் வாழ்க்கைக்கு நல்லது என்று சொல்லிவிட ரோகினியின் முகம் மாறுகிறது.
மறுபக்கம் மீனா கோவிலில் இருக்க அருண் அம்மா மீனாவிடம் அருணுக்கு பெண் பார்க்கும் விஷயத்தை சொல்ல மீண்டும் அமைதியாக இருக்க இந்த தயக்கமும் அமைதியும் தான் அருணையும் சீதாவையும் சேர விடாம இருக்கு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் பிறகு முத்து போன் போட்டு கோவிலுக்கு வருவதாக சொல்ல முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? மீனா என்ன முடிவு எடுக்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
