ராதிகாவிடம் பேசிய ஈஸ்வரி, இனியாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
ஈஸ்வரி ராதிகாவை சந்தித்து பேச முடிவெடுக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பாட்டு பாடுபவர்களுக்கு 30% தள்ளுபடி என்று போஸ்டரை கடையில் ஒட்டி அதனை போட்டோ எடுத்து அனுப்ப இனியா வேலை பார்த்துக் கொண்டிருக்க போன் பண்ணி சொல்லி கேட்கிறார் சூப்பர் ஐடியா அம்மா என்று சொல்லிவிட்டு எனக்கு இப்போ வேலை இருக்கு நான் அப்புறம் கால் பண்றேன்னு சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார். மறுபக்கம் ஈஸ்வரி கோபி விஷயத்தில் பாக்கியா அவருடைய விஷயத்துல முடிவு மாத்திக்க மாட்டா அதுக்காக கோபியை இப்படி விட்டுற முடியும் இதுக்கு ஏதாவது ஒன்னு பண்ணி ஆகணும் என்று ராதிகாவிற்கு ஃபோன் போடுகிறார்.
ஈஸ்வரியிடம் இருந்து போன் வருவதை பார்த்த ராதிகா ஃபோனை எடுத்து பேச ஈஸ்வரி நலம் விசாரிக்க ராதிகாவும் பதில் சொல்லுகிறார். என்ன விஷயமா எதற்காக போன் பண்ணி இருக்கீங்க என்று கேட்க இப்ப பெங்களூர்ல தான் இருக்கியா என்று கேட்கிறார் இல்லம்மா வேலை விஷயமா சென்னை வந்திருக்கேன் மூணு நாள் இருப்ப பாக்கியா கூட தெரியும் என்று சொல்ல பாக்கியம் என்கிட்ட எதுவும் சொல்லல நம்ப மீட் பண்ணி பேசலாமா என்று ஈஸ்வரி கேட்க ராதிகாவும் எங்கே வரணும் என்று கேட்கிறார் வீட்டுக்கு வந்தா நல்லா இருக்காது பக்கத்துல இருக்குற அம்மன் கோவிலுக்கு வந்துடுறியா என்று கேட்க எனக்கு மீட்டிங் ஒன்னு இருக்கு 11 மணி ஆயிடும் பரவாயில்லையா என்று கேட்க அப்ப நான் தெரிஞ்சவங்க வந்துருவாங்க என்று சொன்ன உடன் ராதிகா ரெஸ்டாரண்டில் மீட் பண்ணலாம் என்று சொல்ல ஈஸ்வரியும் சம்மதிக்கிறார்.
மறுபக்கம் பாக்கியாவும் செல்வியும் பேசிக்கொண்டிருக்க கவுன்சிலர் வருகிறார். பாக்கியா ஒட்டி இருக்கும் போஸ்டரை பார்த்து பாட்டு பாடினால் 30% தள்ளுபடி நாங்க நல்லா பாட்டு பாடுவோமே என்று ஹோட்டலில் பாட்டு பாடி மேலும் தட்டி டான்ஸ் ஆட பாக்கியா சூப்பர் என்று கைத்தட்டி பாராட்டி விட்டு சாப்பிடுங்க என்று சொல்ல அவர்களும் சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் போக உங்களுக்கு ஆபர் போக மீதி இருக்கிற பிள்ளை கட்டினால் தானே கஸ்டமர்களை நம்புவாங்க என்று சொல்ல அவர்களும் பிள்ளை கட்டி விட்டு செல்கின்றனர். மறுபக்கம் இனியா ரூமில் படித்துக் கொண்டிருக்க நிதிஷ் தடுமாறிக் கொண்டு சோபாவில் வந்து உட்கார உங்களுக்கு என்ன ஆச்சு என்று கேட்கிறார். ஆனால் நிதிஷ் எதுவும் பேசாமல் பெட்டில் படுத்து விட சந்திரிகா சுதாகர் வந்தவுடன் எது நடக்க கூடாதுன்னு நினைச்சமோ அது நடந்துருச்சு திருப்பியும் நிதிஷ் ட்ரக்ஸ் யூஸ் பண்றான்னு தோணுது என்று சொல்ல அது மட்டும் நடக்கக்கூடாது என்று சொல்லி விட்டு ரூமில் வந்து பார்க்க இனியா என்னாச்சு அங்கிள் நிதிஷ் குடிப்பாரா என்று கேட்க அந்த பழக்கொல்லா இல்லம்மா என்று சொல்லுகிறார் நான் நிதிஷ் கூட்டிட்டு போய் படுக்க வைத்துக்கொள்கிறேன் என்று சொல்ல வேண்டாம் பாத்துக்குறேன் என்று சொல்லிவிடுகிறார். சுதாகர் என சொல்லுகிறார்? ஈஸ்வரி பாக்யாவை சமாளிக்க என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
