ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா-43’ படத்தின் கதை என்ன தெரியுமா?
‘சூர்யா-45’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்..
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ரெட்ரோ’ படத்தின் வெற்றி சூர்யாவிற்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45-வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா-45’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ‘ஆறு’ படத்திற்கு பின்னர் மீண்டும் திரிஷா இணைந்துள்ளார். மேலும், சுவாசிகா, ஷிவிதா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், மலையாள நடிகை இந்திரன்ஸ், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கிறார்கள். வில்லனாக ஆர்.ஜே. பாலாஜி நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பாடகி ஹரிணியின் மகன் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ‘கருப்பு’ என பெயர் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்த நாளான ஜூன் 20-ந்தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஜூலை 23-ந்தேதி சூர்யாவின் பிறந்த நாளில் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ‘சூர்யா-45’ படத்தின் கதையை பொறுத்தவரை, படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், அதாவது, சாமியாகவும் மனிதனாகவும் வருவார் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது கடவுள்… ‘வழக்கறிஞர் அவதாரம்’ எடுத்து தர்மத்தை நிலை நாட்டுவது போன்ற கதை என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
முன்னதாக ‘ஜெய்பீம்’ படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக நடித்து இருந்தார். அந்த படம் தியேட்டரில் வெளியாகவில்லை என்றாலும், ஓடிடியில் வெளியாகி பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், சாய் அபயங்கர் படம் பற்றி தனது வலைத்தளம் வாயிலாக தெரிவிக்கையில், ‘இப்படம் தரமான ஆக்சன் படமாக விறுவிறுப்பான ஒரு படமாக இருக்கும்’ என கூறியுள்ளார்.