விஜயாவை அலறவிட்ட முத்து, அண்ணாமலை கொடுத்த ட்விஸ்ட், சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது என்ன?
விஜயாவை முத்து அலற விட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ரோகினி விஜயாவை சாமியாரிடம் அழைத்துச் செல்ல பார்வதியிடம் உதவி கேட்க பார்வதியும் மனோஜ் மற்றும் விஜயா இருவரையும் வரவேற்கிறார்.
இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க முத்து எமதருமராஜா கெட்டபில் வந்து சிரிக்க விஜயா சாமியார் உங்க வீட்டு வாசல்ல எமதர்மராஜா பாசக்கயிறு போட்டு காத்துக்கொண்டிருக்கிறார் என்று சொன்னதை நினைத்துப் பார்க்கிறார்.
உடனே அலறி அடித்துக் கொண்டு ஓட அண்ணாமலை வந்து என்னடா முத்து இது எல்லாம் என்று கேட்க குடும்பத்தினர் அதிர்ச்சியடைய விஜயா முத்துவை உத்து பார்க்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று இனிவரும் எபிசோடுகளை பார்த்து தெரிந்து கொள்வோம்.