போதும் சார் போதும்: கமல்ஹாசன் பேச்சுக்கு, நடிகர் நானி ‘வைரல்’ பதிவு

மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கமல்ஹாசன், நடிகர் நானியின் பழைய பேட்டி ஒன்றினைக் குறிப்பிட்டுப் பேசினார். அதற்கு நானி தனது எக்ஸ் பக்கத்தில் பதிலும் கொடுத்துள்ளார்.

நடிகர் நானி ஒரு முறை அளித்த பேட்டியில், கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ படம் குறித்து சிலாகித்து பேசியிருந்தார். நானி பேசியதை குறிப்பிட்டு பேசிய கமல்ஹாசன், நான் நானியின் பெயரைச் சொன்னால் போதும், நன்றி சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். அதாவது நானி தனது பழைய பேட்டியில்,

‘தனக்கு இப்போதும், ஆச்சரியமாக உள்ள விஷயம் ‘விருமாண்டி’ படத்தில் கோர்ட் காட்சியில் கமல்ஹாசன் தூங்கிக் கொண்டிருப்பார். தூக்கத்தில் இருந்து அவர் எழும்போது, தனது மீசையை சரி செய்துகொண்டு, வறண்டுபோன வாயை சரி செய்வார். சினிமாவில் பலரும் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளார்கள். ஆனால், யாரும் அவரைப் போன்று நடித்ததில்லை. அவர் நடிக்கிறாரா என்றுகூட என்னால் சொல்ல முடியவில்லை’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கமல்ஹாசன் இது குறித்து, நானியின் பெயரைக் குறிப்பிடாமல் கேள்வி எழுப்பியதும், உடனே கமல்ஹாசன் ‘ நானி’ என்று நடிகர் நானியின் பெயரைக் குறிப்பிட்டார்.

மேலும் நானியின் பெயரை நான் சொன்னதற்கு காரணம் ‘நன்றிகள் நானி’ என சொல்வதை விட பெரியது, நானி என்று அவரது பெயரைச் சொன்னாலே போதும் அவருக்கு. அதுபோலத்தான் இருக்க வேண்டும் நடிப்பும் சினிமாவும். நான் மனதில் என்ன நினைக்கிறேன் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்’ என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் இந்த பேட்டியை பார்த்த நானி, தனது எக்ஸ் பக்கத்தில் கமல்ஹாசனை டேக் செய்து ‘போதும் சார், போதும்’ என பதிவிட்டு அதனுடன் சிவப்பு நிற இதயக்குறியையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி தெறிக்கிறது.

 kamalhaasan metion naani name after naani replay