ஜெயிலர் 2 : ஷூட்டிங் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
ஜெயிலர் 2 படம் குறித்து ஷூட்டிங் அப்டேட் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் திலிப் குமார் இயக்கிய இந்த படத்தின் முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்தப் படத்தின் வில்லனாக sj சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்று விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது ஜெயலர் 2 படத்தின் ஷூட்டிங் அப்டேட் கொடுத்துள்ளார் அதாவது இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ளதாகவும் இன்னும் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
