தனுஷ் 56 : இயக்குனர் யார் தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தனுஷ் 56 படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Dhanush 56  Do you know who the director is The official announcement..!
Dhanush 56 Do you know who the director is The official announcement..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கிய நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாக இருந்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் 56 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை போஸ்டர் உடன் வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கர்ணன் என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.