USA வில் தொடங்கிய குட் பேட் அக்லி படத்தின் முன்பதிவு.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட போஸ்டர்..!
USA வில் குட் பேட் அட்லி படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் த்ரிஷா, அர்ஜுன், பிரசன்னா, சுனில் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. வருகிற பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு அமெரிக்காவில் முன்பதிவு துவங்கியுள்ளது.
இதனை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டருடன் வெளியிட்டு உள்ளது. இது மட்டுமில்லாமல் தமிழகத்தில் வரும் நான்காம் தேதி முன்பதிவு தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
AK is ready with VERA LEVEL ENTERTAINMENT 💥#GoodBadUgly USA Premieres on April 9th ❤🔥
USA release by @PrathyangiraUS. Bookings open now!
🎟️ https://t.co/YGyNB7a2uB#AjithKumar #AdhikRavichandran #GoodBadUgly #MythriMovieMakers pic.twitter.com/wDArAnCZfz
— Mythri Movie Makers (@MythriOfficial) April 2, 2025