ரஜினி வெளியிட்ட ஒரு கைதியின் டைரி மோஷன் போஸ்டர்

Web Ads

சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒரு கைதியின் டைரி’. இப்படத்தின் மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர் முன்னிலையில் வெளியிட்டார்.

KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உணர்வுகளுடன் ஆக்‌ஷன், கிரைம் மற்றும் பரபரப்பான சம்பவங்களும் இணைந்த விறுவிறுப்பான திரைக்கதையாக படம் உருவாகவுள்ளது.

வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் சாந்தனு மற்றும் சீமானின் கதாபாத்திரத் தோற்றங்களுடன் மதுரை கோயில் கோபுரங்கள் இடம்பெற்றுள்ளன. கையெழுத்துப் பிரதியைப் போன்ற வடிவமைப்பும், ‘ஒரு கைதியின் டைரி’ என்ற தலைப்பும் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

Web Ad 2

KRG Kannan Ravi Group தயாரிக்கும் 10வது திரைப்படமாக இப்படம் உருவாகிறது. தரமான கதைகள் மற்றும் வலுவான படைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் தயாரிப்பு நிறுவனம், இந்தப் படத்தையும் பிரம்மாண்டமான தயாரிப்பு தரத்துடன் உருவாக்கி வருகிறது.

‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ உள்ளிட்ட படங்களில் குடும்ப உணர்வுகள், ஆக்‌ஷன் மற்றும் விறுவிறுப்பை இணைத்து ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் சுசீந்திரன், இந்தப் படத்திலும் அப்பா – மகன் உறவை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார். படத்தின் முழு படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

சுசீந்திரன் – சாந்தனு கூட்டணி, சீமானின் முக்கிய கதாபாத்திரம், சாம் சி.எஸ். இசை மற்றும் மதுரை பின்னணி என பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘ஒரு கைதியின் டைரி’, மோஷன் போஸ்டர் வெளியானதிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.