சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப் போகும் பிரபல முன்னணி நடிகர்.. சூப்பர் அப்டேட் இதோ..!
சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்து நடிக்கப் போகும் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சிறுத்தை சிவா. சிறுத்தை படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் கார்த்திக் ஹீரோவாகவும் தமன்னா ஹீரோயினாக நடித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் ,அண்ணாத்த போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 14 ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்தியுடன் இணைந்து படம் இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் உருவான சிறுத்தை திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்த்து எக்கச்சக்கமாக அதிகரித்து உள்ளது.
