ப்ரீ புக்கிங்கில் வசூலில் சாதனை படைக்கும் குட் பேட் அக்லி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன், பிரசன்னா, சுனில் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.வரும் பத்தாம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது ப்ரீ புக்கிங்கில் மட்டுமே 1 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவித்து உள்ளது இந்த திரைப்படம். இதனால் இந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
