சுதாகரிடம் இனியா கேட்ட கேள்வி, மனம் மாறிய கவுன்சிலர்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
சுதாகரிடம் இனிய கோபமாக பேச மறுப்பக்கம் பாக்யா செய்து உதவியால் கவுன்சிலர் மனம் மாறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா தூங்க கதவுகளை சாத்து அந்த நேரம் பார்த்து கோபி வருகிறார் தப்பா நினைச்சுக்காத பாக்கியா டைம் ஆயிடுச்சு இருந்தாலும் அம்மா கிட்ட கொஞ்சம் கோவமா பேசிட்டேன் அவங்க தூங்கிருக்க மாட்டாங்க என் மேல கோவமா இருப்பாங்க பேசிட்டு போயிட்டேன்னு சொல்ல பாக்கியா சம்மதிக்கிறார். கோபி வெளியில் இருந்து கதவை தட்ட நீங்க தூங்கி இருக்க மாட்டீங்கம்மா எனக்கு தெரியும் என்ன மன்னிச்சிடுங்க நான் கோவமா பேசிட்டேன் என்று எவ்வளவு சொல்லியும் ஈஸ்வரி முழித்துக் கொண்டு கதவை திறக்காமல் இருக்கிறார்.
ஒரு கட்டத்திற்கு மேல் கோபி பேசிக்கொண்டே இருக்க ஈஸ்வரி பாக்யாவை கூப்பிட்டு நீ அங்கதானே இருக்க முதலில் போக சொல்லு என்று சொல்லிவிடுகிறார். கோபியும் வேறு வழி இல்லாமல் சென்று விட பாக்யா ராமமூர்த்தியின் போட்டோவை பார்த்து நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்க்கிறார். உடனே ஈஸ்வரி வந்து போயிட்டானா நாளைக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க நாளைக்கு நான் பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இனியா நித்திசை பார்க்க ரூமுக்கு போக கதவு பூட்டி இருப்பதால் உடனே சந்திரிகா வருகிறார் இங்கே என்ன பண்றேன் என்று கேட்க நீங்க முதல்ல ரூமை திறந்து விடுங்க நான் நித்திஷ் கிட்ட பேசணும் என்று சொல்லுகிறார்.
அதெல்லாம் பேச முடியாது நான் உனக்காக தான் அவன உள்ள வச்சு பூட்டி இருக்கேன் என்று சொல்ல நான் என்ன தப்பு பண்ணேன் என்று கேட்கிறார் நீ அந்த பையன் கிட்ட பேசினது தான் தப்பு என்று சொல்ல அதுல என் தப்பு எதுவுமே இல்லையே நான் நல்லா இருக்கியான்னு தானே கேட்டேன் அது எப்படி தப்பாகும் என் மேல எந்த தப்பும் கிடையாது நீங்க ஏதோ இங்க ஒரு விஷயத்தை மறைக்கிறீங்க என்று சொல்லி வாக்குவாதம் செய்து கொண்டிருக்க உடனே சுதாகர் வருகிறார். அவரும் உன்னோட கேரக்டர் என சொல்ல வர என்னோட கேரக்டர்ல எந்த தப்பும் கிடையாது நீங்க இங்க நடக்குறத மறைக்க என் மேல பழி போட்டுக்கிட்டு இருக்கீங்க என்று சொல்லிவிட்டு கோபமாக செல்ல உடனே சுதாகர் சந்திரிகாவிடம் எல்லாத்தையும் கேட்டுட்டு தலையாட்டிட்டு போற பொண்ணு இனியா கிடையாது அவ கேள்வி கேப்பா அதே மாதிரி ரொம்ப நாளைக்கு நித்திஷ் விஷயத்தை மறைக்க முடியாது அவ கண்டுபிடிச்சிடுவா அதனால ஒழுங்கா உன் புள்ளையை திருந்தி வாழ சொல்லு இல்ல நான் இந்த கல்யாணத்துக்குப் பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போயிடும் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் பாக்யா ஹோட்டலில் இருக்க செல்வியிடம் இன்னைக்கு 15 பேருக்கு எக்ஸ்ட்ரா சமைக்கிற மாதிரி இருக்கும் ஒரு இடத்துல ஆர்டர் கேட்டு இருக்கேன் என்று சொல்ல சந்தோஷம் தான் செஞ்சிடலாம் என்று பேசிக்கொண்டு இருப்பது கொஞ்ச நேரத்தில் இனியா ஃபோன் பண்ணுகிறார் இனிய வாய்ஸ் டல்லாக இருப்பதால் என்னாச்சு இனியா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா ஆபீஸ்ல ஒரு ப்ராஜெக்ட் கொடுத்து இருக்காங்க அதுதான் என்று சொல்லி சமாளித்துவிட்டு கொஞ்ச நேரத்தில் போனை வைக்க பாக்கியா பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாலும் அவங்க எப்படி வாழறாங்களோனு தினம் நினைச்சு பயப்பட வேண்டியதாயிருக்கு என்று பேசிக்கொண்டு இருக்கிறார்.
சரி நான் மளிகை கடைக்கு போயிட்டு வரேன் என பாக்யா வெளியில் வர ஒரு பெண்மணி மயங்கி கீழே போக அவரை பிடித்து ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார். கொஞ்ச நேரத்தில் கவுன்சிலர் பாக்யாவின் ஹோட்டலுக்கு வர அவர் என்ன சொல்லுகிறார்?பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
