சத்யா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
சத்யா சந்தோஷமான விஷயம் சொல்ல முத்து கண் கலங்கி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோட் இன் கீரைக்காரப் பெண் வீட்டுக்கு வர அது விஜயா கனவில் அண்ணாமலை தாலி கட்டிய பெண்ணாக இருப்பதால் உடனே பயம் அதிகமாகி கீரைக்கார பெண்மணியை திட்டு விடுகிறார். அவர் விஜயாவை அக்கா கீர நல்லா இருக்கு அக்கா சூப்பரா இருக்கா என்று சொல்ல முதல நீ அக்கான்னு கூப்பிடுறது நிறுத்து இனிமே இந்த வீட்ல கொஞ்ச நாளைக்கு கீரை கிடையாது என்று சொல்ல அண்ணாமலை நான் டெய்லியும் இவங்ககிட்ட தான் கீரை வாங்கிட்டு வருவேன் என்று சொல்ல இனிமே இந்த குடும்பத்துக்கு கீரை ஆகாது என்று சொல்லி அந்த பெண்மணியை விரட்டி அடிக்கிறார் உனக்கு என்ன ஆச்சு எதுக்கு இப்படி நடந்துக்கிற என்று கேட்க முத்து அம்மாவுக்கு தூக்கத்துல நடக்குற வியாதி இருக்கு என்று சொல்லுகிறார். அதெல்லாம் எனக்கு எதுவும் கிடையாது என்று சொல்ல அப்ப எதுக்கு போய் புடவை மாத்திட்டு வந்தீங்க என்று கேட்க தண்ணி கொட்டிடுச்சு என்று சொல்லி சமாளிக்கிறார்.
உடனே மனோஜ் ரோகினியை பூஜை ரூமுக்கு அழைத்து மனோஜ் ரோகினியை கூட்டிட்டு ஷோரூமுக்கு போ என்று சொல்ல இருவரும் சந்தோஷப்படுகின்றனர் உடனே ஆசீர்வாதம் வாங்கிவிட்டு தேங்க்ஸ் சொல்ல விஜயா உன்ன பணக்காரன் மருமகளா தான் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் நிஜத்திலும் நீ அது மாதிரி மாறனும் என்று சொல்லுகிறார். மறுபக்கம் மாறும் சீதா வேலை செய்யும் இடத்தில் சந்தித்து நாளைக்கு பத்து மணிக்கு ரிஜிஸ்ட்ரேஷன் நடக்க போகும் விஷயத்தை சொல்ல மீனாவும் வருகிறார் மீனாவிடம் விஷயத்தை சொல்லிவிட்டு பேசிக்கொண்டு இருக்க கொஞ்ச நேரத்தில் சத்யா வர அருணை மீனா போக சொல்லி விடுகிறார் பிறகு அருண் வந்து பாஸ் பண்ண விஷயத்தை சொல்ல இருவரும் சந்தோஷப்படுகின்றனர். ஸ்வீட் கொடுக்க அவர்கள் சாப்பிட்டுவிட்டு மாமா கிட்ட சொல்லிட்டியா என்று மீனா கேட்க நேர்ல போய் சொல்ற அக்கா என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.பிறகு அருண் வந்தவுடன் அருணிடம் விஷயத்தை சொல்ல சீதா நன்றி சொல்கிறார் நீங்கள் அன்னைக்கு மட்டும் லொகேஷன் அனுப்பவில்லை என்றால் சத்யாவை கண்டுபிடித்து இருக்க முடியாது என்று சொன்ன அதெல்லாம் ஒன்னும் இல்ல உன் தம்பி அந்த டென்ஷனிலும் எக்ஸாம் எழுதினது பெரிய விஷயம் என்று சொல்லி பாராட்டுகிறார் சரி நாளைக்கு மறக்காம வந்துருங்க என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் கார் ஷெட்டில் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்க முருகன் வருகிறார். என்ன விஷயம் முருகா என்று கேட்க நான் ஒரு முக்கியமான முடிவு எடுத்து இருக்கேன் நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கோம் என்று சொல்ல ஏண்டா இப்படி என்று கேட்க எங்க சைடு ஆள் கொஞ்சம் தான் அவங்க பக்கமும் கொஞ்சம் பேர்தான் அதனால ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு அப்புறம் ரிசப்ஷன் வச்சுக்கலாம்னு பிளான் பண்ணி இருக்கோம் என்று சொல்ல நல்ல விஷயம் தாண்டா பண்ணு என்று முத்து சொல்ல எனக்கு ரிஜிஸ்ட்ரேஷன் பத்தின எந்த டீடைலும் பெருசா தெரியாதுன்னு நாளைக்கு நீங்க வந்தீங்கன்னா நான் போய் கேட்டுட்டு வரலாம் என்று சொல்ல முத்துவும் சம்மதிக்கிறார்.
முருகன் போன கொஞ்ச நேரத்தில் உடனே சத்யா வர சந்தோஷமாக ஸ்வீட் கொடுக்க என்னாச்சுடா இவ்வளவு சந்தோசமா இருக்க என்று கேட்க நான் பாஸ் பண்ணிட்டேன் மாமா என்று சொல்ல முத்து முத்து ரொம்ப சந்தோஷப்படுகிறார் உணர்ச்சிவசப்பட்டு சத்தியாவை கட்டிப்பிடித்து கண் கலங்க கண்டிப்பா இத கொண்டாடிய அவனும் நான் பார்ட்டி கொடுக்க போறேன் எல்லாருக்கும் நாளைக்கு மதியம் எல்லாரையும் கூப்பிட்டு விருந்து வைக்கப் போறேன் நம்ம வீட்டு மாடி மேல தான் விருந்து என்றெல்லாம் பேச சத்தியா கண் கலங்குகிறார். இந்த விஷயத்தை அப்பாகிட்ட சொல்லிருந்தா அவரு எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பாரோ அந்த அளவுக்கு நான் உங்ககிட்ட பார்க்கிறேன் நான் உங்களை அப்பாவா பார்க்கிறேன் என்று கண்கலங்கில் முத்துவை கட்டிப்பிடித்து அழுகிறார். உடனே அவரை சமாதானப்படுத்தி ஸ்வீட் ஊட்டி சிரிக்க வைக்கிறார்.
பார்வதி வீட்டுக்கு வர முத்துவிடம் விஜயா எங்கே என்று கேட்க ரூம்ல தான் இருக்காங்க என்று சொல்லுகிறார். பார்வதி என்ன சொல்லுகிறார்? அதற்கு விஜயாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
