ஏகாம்பரத்திற்கு தெரிந்த உண்மை, தடுத்து நிறுத்து வாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு, மருமகள் சீரியல் மகா சங்கமம் ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் தெரியணும் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோடில் இந்தக் கஞ்ச பயலா இவ்வளவு பெரிய பங்களால தங்கி இருக்கான் என்று சொல்ல, வேல்விழி நம்மளும் இந்த வீட்லதான் தங்கனும் என்று சொல்லுகிறார். உடனே ஏகாம்பரம் பிரபுவிடம் வம்பு இழுக்க அவரும் பதிலுக்கு பேசுகிறார். பிறகு நந்தினி ஆதிரையிடம் யார் என்று கேட்க, பிறகு ஆதிரை குடும்ப விஷயத்தை நந்தினியிடம் சொல்ல, சூர்யா இதை கவனித்து நான் பாத்துக்கிறேன் என்று ஆதிரையிடம் சொல்லிவிட்டு உள்ளே போகிறார். பிரபு பக்கத்தில் நின்று சூர்யா உங்களுக்கு நான் ரூம் தருகிறேன் என்று சொல்லிக் கூப்பிட, பிரபு என்ன மீறி அவங்க எப்படி வராங்கன்னு பார்க்கிறேன் என்று சொல்ல சூர்யா நீங்க வாங்க என்று கூப்பிடுகிறார்.
பிரபு வெளியில் போக சொல்ல,சூர்யா உள்ளே கூப்பிடுகிறார். இவர்களின் சத்தம் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் வந்து விடுகின்றனர். பிறகு பெரியவரிடம் பேசி அந்த குடும்பத்தை சூர்யா தங்க வைத்து விட, சுந்தரவல்லி கோபப்பட அருணாச்சலம் ரூம் இல்லாமல் எங்கடா கொடுப்ப என்று கேட்க எங்க இருக்கிற யாரையாவது தூக்கிட்டு கூட நான் ரூம கொடுப்பேன் என்று சொல்ல, பிரபு சண்டைக்கு வருகிறார். சுரேகாவிடம் நீ மட்டும் தான் ஒரு ரூம்ல தங்கர நீ போய் உன் அக்கா ரூம்ல தங்கிகோ என்று சொல்ல, சுந்தரவல்லி நீ என் ரூமுக்கு வா நான் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர். பிறகு ஏகாம்பரமும் சூர்யாவும் நன்றாக பேசி பழகி விட்டு செல்கின்றனர். அனைவரும் ஒன்று கூடி ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்க திருவிழா பற்றி அருணாச்சலம் ராஜா தம்பியிடம் சொல்லுகிறார். சூர்யா பாப்பாவ மட்டும் பத்திரமா பாத்துக்கணும் என்று சொல்ல, குழந்தையை வச்சுக்கிட்டு எதிர்ல ஏன் பேசுறீங்க என்று நந்தினி சொல்ல பிரபு அதெல்லாம் தெரிஞ்சா தானே என்று சொல்லுகிறார்.
ராஜா தம்பி நான் எதுக்காகவும் பயப்படல என் பேத்திய அந்த அம்மா பாத்துப்பா நானும் தைரியமா நம்பிக்கையா இருக்கேன் உங்க பிரச்சனை எல்லாம் இந்த திருவிழாவோட முடிவுக்கு வந்துரும் நம்பிக்கையை விட்றாதீங்க என்று மற்றவர்களுக்கு அட்வைஸ் சொல்லுகிறார். பிரபுவின் பாட்டி திருவிழா பற்றி கேட்க, திருவிழா எப்படி நடக்கும் என்பதை ராஜா தம்பி விளக்கமாக சொல்லுகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் சமபந்தி விருந்து பற்றி பேச ஆரம்பிக்க ஆதிரை பயப்படுகிறார். உடனே ஆதிரை சமாளித்து விட ராஜா தம்பி டான்ஸ் பிராக்டிஸ் எல்லாம் பண்ணிட்டீங்களா என்று கேட்க சூர்யா பிரபு இருவரும் அவர்களது மனைவிகளை அழைத்து ரூமுக்கு வருகின்றனர். சூர்யா நந்தினி இடம் லோக்கலா ஒரு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுற மாதிரி ஆடலாம் என்று சொல்ல நந்தினி தயவு செய்து என்னை விட்ருங்க எனக்கு டான்ஸ் வராது என்று சொல்ல சூர்யா டான்ஸ் ஆடி அந்த நகையை ஜெயிக்கலாம்னு பார்த்தா இப்படி சொல்ற என்று சொல்லுகிறார். எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை என்று சொல்ல நான் உனக்கு கற்றுக் கொடுக்கிறேன் நீ வின் பண்ணிட்டு செயின் போட்டுக்கிட்டு எங்க அம்மா முன்னாடி நடந்தா வயிற்றெரிச்சலோடு ஓடிப் போயிடுவாங்க எனக்கு எவ்வளவு குளுகுளுன்னு இருக்கும் தெரியுமா? ப்ளீஸ் நந்தினி என்று சொல்லுகிறார்.
இது மட்டும் இல்லாம அந்த திமிரு புடிச்சவனை தோற்கடிக்கணும் என்ற சவால் விடுகிறார். பிறகு நான் பாட்டு வைக்கிறேன் டான்ஸ் ஆடலாம் என்று முடிவு எடுக்க,மறுபக்கம் பிரபு பாட்டு ஆன் பண்ணிவிட்டு அவர் பாட்டுக்கு ஆடிக்கொண்டிருக்க ஆதிரை சிரிக்கிறார். இப்படி ஆடினா மூணாவது பிரைஸ் கூட கிடைக்காது என்று சொல்ல அப்போ நீ எனக்கு கற்றுக்கொடு என்று சொல்ல ஆதிரையும் சம்மதிக்கிறார். சூர்யா நந்தினிக்கு பாட்டு போட்டு டான்ஸ் ஆட சொல்லிக்கொடுக்க, மறுபக்கம் ஆதிரை பிரபுவுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கிறார். அனைவரும் கோவிலுக்கு வர சூர்யா நம்ப தான் ஜெயிக்கணும் என்று சொல்ல பிரபு நம்ம தான் ஜெயிக்கணும் என்று ஆதிரையிடம் சொல்லுகிறார். மறுபக்கம் இருவர் அம்மன் நகையை திருட பிளான் போடுகின்றனர். ஐஸ் விற்கும் வியாபாரியாக இருக்கும் இவர்கள் ஊர்வலமாக நகையை எடுத்துக் கொண்டு வரும்போது நம்ம திருட வேண்டும் என்று சொல்லுகின்றனர்.
இவ்வளவு பாதுகாப்புடன் இருக்கும்போது எப்படி எடுக்க முடியும்? என்று கேட்க ஒருவர் அதே நகை பெட்டியை போன்று ஒன்று ரெடி பண்ணி வைக்க பட்டாசு வெடித்த புகை அதிகமாக வரும் போது இந்தப் பெட்டியை மாற்றிவிடனும் இதுதான் நம்ம திட்டம் என்று சொல்லுகிறார். பிரபு ஆதிரை திருவிழாவை சுற்றி பார்க்க அந்த இரண்டு திருடர்களில் ஒருவன் பிரபு பர்ஸ் அடிக்க திட்டம் போடுகிறான். நந்தினி சூர்யாவிற்கு வளையல் வாங்கி கொடுக்க போக ஆதிரையும் வளையல் பார்க்க வருகிறார். ஆதிரை இரண்டு டசன் வளையல் கேட்க பிரபு ரெண்டு வளையல் மட்டும் வாங்கிக்கோ என்று சொல்ல சூர்யா சிரிக்கிறார். நந்தினியிடம் நீ இந்த வளையல் கடை ஃபுல்லா வாங்கிக்கோ நந்தினி எவ்வளவு வளையல் இருக்கு என்று கேட்டால் 500 டசன் இருக்கு என்று கடைக்காரர் சொல்ல எல்லாத்தையும் வாங்கிக்குமாறு சொல்லுகிறார் உடனே பிரபு பொண்டாட்டிய போய் சார்ன்னு சொல்ல வைக்குறான் பாரு பணக்கார திமிரு என்று சொல்லுகிறார்.
மீண்டும் சூர்யா பிரபு இருவரும் சண்டை போட, ஆதிரை நந்தினி இருவரும் சமாதானப்படுத்துகின்றன. பிறகு பிரபு அரை டசன் வளையல் கொடு என்று சொல்ல, வளையல் கடைக்காரர் பிரபுவை நக்கலாக பேச, பிரபு கோபப்பட்டு திட்ட சூர்யா இன்னும் வெறுப்பேத்துகிறார். உடனே சூர்யா கடைக்காரரிடம் அந்த வளையலுக்கும் நானே காசு கொடுக்கிறேன் என்று சொல்ல,நீ யாருடா என் பொண்டாட்டிக்கு வளையல் வாங்கி கொடுக்க என்று கேட்க என்னோட சிஸ்டர் ஆதிரை என்று சொல்லுகிறார். நான் கஞ்சன் தான் நான் எதுக்கு செலவு பண்ணனும்னு யோசிச்சு தான் பண்ணுவ, நான் சம்பாதிக்கிற சம்பளத்தை நான் நிதானமா தான் செலவு பண்ணுவேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். நந்தினி சூர்யாவிடம் எதுக்கு பிரபு அண்ணா கிட்ட பிரச்சனை பண்றீங்க என்று கேட்க அவன் தான் தேவை இல்லாம பிரச்சனை பண்றான்னு சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நீங்க எப்படியாவது என் சின்ன மாமனார் கிட்ட பேசி சமபந்தி விருந்தில் கலந்துக்க சொல்லணும் என்று சொல்லுவதை வேல்விழி கேட்டு விடுகிறார். உடனே ஏகாம்பரம் அவரது மனைவியிடம் நீ என்னை இங்க சமபந்தி விருந்து கலந்துக்க தான் கூட்டிட்டு வந்தியா என்று அனைவரும் முன்னிலையிலும் கோபப்பட்டு தாலி மேல சத்தியம் பண்ணு என்று சொல்லுகிறார்.
ஆதிரை சூர்யாவிடம் அவங்க இங்கிருந்து கிளம்பிட்டாங்க அவங்களை எப்படியாவது நீங்க தடுத்து நிறுத்தணும் என்று சொல்ல சூர்யா ஓடி வந்து ஏகாம்பரம் காரை தடுத்து நிறுத்துகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
