ராதிகாவுடன் வீட்டுக்கு வந்த கோபி, அதிர்ச்சியில் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!
ராதிகாவுடன் கோபி வீட்டுக்கு வர ஈஸ்வரி அதிர்ச்சியாகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் கோபி பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி போன் பண்ணி எப்ப வருவ கோபி என்று கேட்கிறார் நீ வரலனா என உயிரோட பார்க்க முடியாது என்று சொல்லி போனை வைக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோபி கோவிலில் சத்தியம் செய்ததை நினைத்துப் பார்க்கிறார். ராதிகாவின் அம்மா இங்க தங்கவிங்களா என்று கேட்டதற்கு என்னால இப்போ இங்க தாங்க முடியாது ஆனால் எனக்கு ராதிகாவும் மயூ ரொம்ப முக்கியம் அவங்கள விட்டோ என்னால இருக்க முடியாது என்று சொல்லுகிறார் ரெண்டுக்கும் ஆசைப்பட்டா எப்படி என்று ராதிகாவின் அம்மா கேட்க கோபி கொஞ்ச நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் பாக்யாவோட வீட்டுக்கு வாங்க என்று சொல்லுகிறார்.
உங்களுக்கே அங்கு உரிமை இல்லாதப்போ எங்களுக்கு மட்டும் எப்படி இருக்கும் ஒரு போது அது நடக்காது என்று உறுதியாக இருக்கிறார் ராதிகா. அந்த வீட்டுக்குள்ள எனக்கு ஒவ்வொரு இடத்திலும் அசிங்கம் தான் நடந்திருக்கு. நான் அங்க ஒரு நாள் கூட சந்தோஷமா இருந்தது கிடையாது அப்படி இருக்கும்போது நான் எதுக்காக வரணும் என்று கேட்கிறார். உங்க அம்மா என்ன அசிங்கப்படுத்தி பேச நாங்க என்றெல்லாம் சொல்ல எங்க அம்மாவால உனக்கு எந்த பிரச்சனையும் இனிமே வராது. நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் ஈஸ்வரி கோபி வருவானா இல்லையா என்று வாசலையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார் வண்டி சத்தம் கேட்டால் கூட கோபியின் கார் சத்தம் போட்டு இருக்கிறது என்று எழுந்து எழுந்து ஓடிப் போய் பார்க்கிறார். என்னையும் இனியாவையும் தவிர இந்த வீட்ல யாரும் கோபி வரலன்னு கவலைப்படவில்லை என்று சொல்ல பாக்கியா கிச்சனிலிருந்து வந்து புருஷன் பொண்டாட்டி கூட வாழறத போய் யாரும் தடுக்க மாட்டாங்க என்று சொல்ல இருந்தாலும் உனக்கு இவ்வளவு வாய் வந்திருக்கக்கூடாது பாக்யா என்று ஈஸ்வரி சொல்லுகிறார்.
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்க காரின் சத்தம் கேட்கிறது உடனே செழியன் இடம் இது கோபியோட கார் சத்தம் தானே என்று கேட்க கார் தான் அப்பாவோட காரன் எனக்கு தெரியாது என்று சொல்ல உனக்கு என்ன தான் தெரியும் என்று சொல்லி எழுந்து வெளியில் ஓடி வருகிறார். பிறகு இனியா மற்றும் செழியன் இருவரும் பின்னால் வர கோபி கேட்டில் நிற்கிறார். வந்துட்டியா கோபி நீ வருவன்னு எனக்கு தெரியும் என்று பேசிக்கொண்டு இருக்க எதுக்கு அங்கே நின்னுக்கிட்டு இருக்க உள்ள வா என்று சொல்லுகிறார். உள்ள வாங்க என்று கூப்பிட அங்கு யாரை கூப்பிடுற கோபி என்று கேட்கிறார் ஈஸ்வரி உடனே மீதி கேட்டையும் திறக்க ராதிகா மற்றும் மயூ நிற்கின்றனர் அவர்களைப் பார்த்து மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைகின்றனர். செல்வியும் இதைப் பார்த்துவிட்டு வீட்டுக்குள் ஓடி வந்து ராதிகாவை அழைத்துக் கொண்டு வந்திருக்கும் விஷயத்தை சொல்லுகிறார்.
கோபி ராதிகாவின் கையைப் பிடித்து உள்ளே கூப்பிடும் போது ராதிகாவிடம் எப்படி பேசி சம்மதிக்க வைத்தார் என்பதை தெரிய வருகிறது. கோபி ராதிகாவிடம் என்னால முடியல ராதிகா நா ஒரு ஹார்ட் பேஷன்ட் என்னால கத்தி கூட பேச முடியல படபடன்னு வருது நான் இன்னும் எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன்னு தெரியாது அதனால உங்க கூட இருக்கணும்னு ஆசைப்படுறேன் என்று சொல்ல எதுக்கு கோபி இப்படி எல்லாம் பேசுறீங்க என்று ராதிகா கேட்கிறார். இப்பவே எனக்கு நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு என்று நெஞ்சை பிடிக்க ராதிகா பதறுகிறார். ராதிகாவின் அம்மா தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க இருக்கட்டும் தயவுசெய்து வாராதுகா உன்ன கையெழுத்து கும்பிடுறேன் காலில் கூட விழப் பார்க்கிறார் வேறு வழி இல்லாமல் ராதிகாவும் சரிவரேன் என்று சொல்லி சம்மதம் தெரிவிக்கிறார்.
ராதிகாவையும், மயூவையும் உள்ளே அழைத்து வர உன்ன மட்டும் தானடா வர சொன்னேன் என்று ஈஸ்வரி கேட்க எதுவா இருந்தாலும் உள்ள போய் பேசிக்கலாமா என்று ராதிகாவையும் மயூவையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்கிறார். நாங்க போனதுக்கு அப்புறம் தான் மயூ ராதிகா என்னை எவ்வளவு மிஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன் என்று சொல்ல,அனைவரும் கேள்வி கேட்க உடனே கோபி என்னால் முடியவில்லை அம்மா படபடப்பா இருக்கு என்று நெஞ்சில் கை வைத்து வலிப்பது போல் செய்கிறார். உடனே ஈஸ்வரி பதறிப் போகிறார்.
பிறகு என்ன நடக்கிறது? ஈஸ்வரி என்ன முடிவு எடுக்கிறார்? அதற்கு கோபியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.