Web Ads

முத்துக்குமரன் சொன்ன வார்த்தை, கோபப்பட்ட ரயான், வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBoss Tamil Season 8 Day 87 Promo 1 Update
BiggBoss Tamil Season 8 Day 87 Promo 1 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் நான்கு ப்ரோமோவில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் நெருப்பு குழி என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. ரயான் முத்துக்குமரனிடம் அஞ்சு பேரும் சேர்ந்து ஒரு ஸ்ட்ராங்கான டீமா காட்டுனீங்க இல்ல அது சத்தியமா எத்திக்கலா இருந்தது. உடனே மஞ்சரி ரயான காலி பண்ணீங்களா அது ஓகே என்று சொல்ல முத்துக்குமரன் ரயான காலி பண்ணல, என்று சொல்லும்போது ரயான் தயவுசெய்து ஒத்துக்கோங்கடப்பா என்று சொல்லுகிறார். பயந்து தான் இப்படி பண்ணி இருக்காங்க என்று சத்தியமா எனக்கு தெரியும் என்று ரயான் சொல்ல நீ பயந்து விளையாடற அளவுக்கு ஒன்னும் பெரிய ஆள் கிடையாது என்று முத்துக்குமரன் சொல்லுகிறார். நான் ஒருத்தனா தான் விளையாடினேன் ஆனா நீங்க அஞ்சு பேரா விளையாடுனீங்க நல்லா விளையாடுறீங்க ஆல் தி பெஸ்ட் என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.