அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்ட ரோகினி,முத்துவுக்கு தெரிந்த உண்மை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
ரோகினி அண்ணாமலை இடம் மன்னிப்பு கேட்க சிட்டியிடம் ரோகிணி பணம் வாங்கிய விஷயம் குறித்து மீனா முத்துவிடம் சொல்லுகிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினி இடம் எவ்வளவு நேரம் கதவ தட்டுவது அவன் வெளியவே நிக்கணும்னு முடிவு பண்ணி இப்படி பண்றியா என்று கேட்க இப்படி எல்லாம் இல்ல ஆன்டி என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் இடம் போய் குளிச்சிட்டு சாப்பிட வா என்று சொல்லி அனுப்ப ரோகிணி கதவை மூட போக விஜயா தடுக்கிறார். எதுக்கு மூடனும் திறந்தே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
இதனை முத்துவும்,மீனாவும் பார்த்துக் கொண்டிருக்க இவங்க ரெண்டு பேரையும் பிரித்து வைக்கிற வேலைய பாக்குறாங்க அவனும் அவங்க சொன்ன பொம்மை மாதிரி இருக்கா என்று சொல்லிக் கொண்டிருக்க மீனா இது மட்டும் இல்லாம சத்யாவை பார்த்தப்போ இவங்க சிட்டி கிட்ட அடிக்கடி கடன் வாங்கி இருக்கிறதா சொன்ன என்று சொல்ல, முத்து சிட்டிய நம்மளுக்கு ஆகாதுன்னு தெரியும் ஆனா பார்லர் அம்மா ஏன் அங்க கடன் வாங்கணும் இது பார்லர்ல நல்லா சம்பாதிக்கிறது அவன் ஷோரூம்ல சம்பாதிக்கிறான் அப்புறம் எதுக்கு கடன் வாங்கணும் இதுக்கு காசு மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமா எனக்கு தெரியல இதுல ஏதோ ஒரு உண்மை இருக்கு கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் அண்ணாமலை வேலைக்கு ரெடி ஆகி கொண்டிருக்க ரோகினி அண்ணாமலை இடம் சென்று என்னை மன்னித்து விடுங்கள் நான் பண்ணது தப்பு தான் மனோஜோட நல்லதுக்கு தான் நான் பண்ண என்று சொல்ல நீ பணத்தை கொடுத்து இருந்தா அதை நாங்களே பண்ணிருப்போமே என்று கேட்கிறார். உன் மேல விஜயா ரொம்ப பாசமா இருந்தா, மத்தவங்களை விட உன்ன தான் தூக்கி வச்சு கொண்டாடுனா ஆனா அவகிட்ட ஏமாத்துனதுனால அவ கோவத்துல இருக்கா என்று சொல்ல அருணாச்சலத்திலும் ரோகினி மீண்டும் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்கிறதுனால நீ பண்றது தப்புன்னு ஆயிடாது எதுவா இருந்தாலும் கொஞ்ச நாள் போகட்டும் பேசிக்கலாம் என்று சொல்லி அங்கிருந்து சென்று விடுகிறார்.
மீனா அண்ணாமலைக்கு சாப்பாடு மாத்திரை எல்லாம் கொடுக்க விஜயா அவர்களிடம் சொல்லிவிட்டு அவர் வேலைக்கு கிளம்புகிறார். மறுபக்கம் அனைவரும் சாப்பிட உட்கார்ந்து கொண்டிருக்க விஜயா என்ன கூப்பிட மாட்டியா என்று மீனாவிடம் கேட்கிறார். உடனே முத்து இந்த டைம்ல சாப்பாடு ரெடியா இருக்கும்ல உங்கள வேற கூப்படனுமா என்று கேட்கிறார். விஜயாவுக்கு சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மனோஜ் வருகிறார். ரோகினியை கூப்பிடலாமா வேண்டாமா என்று தயக்கத்தில் நிற்க விஜயா மனோஜை கூப்பிட்டு சாப்பிட உட்கார வைக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து ரோகினி வர தயங்கி நின்று கொண்டிருக்க ஸ்ருதி வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிடுகிறார்.
ரோகினி வந்து உட்காரா விஜயா எழுந்திருக்க சொல்லுகிறார். ரோகினியும் எழுந்து நின்று விடுகிறார். ஸ்ருதி மற்றும் முத்து பேசிக்கொண்டிருக்க எல்லா பிரச்சனையும் இவங்களால தான் என்று சொல்ல மீனா கோபப்பட்டு எங்களால என்ன பிரச்சனை என்று கேட்க நம்மள தான் சொல்றேன் என்று சொல்லுகிறார் முத்து. அவங்க பண்ண தப்பு தானே சொன்னாரு அவரு ஒன்னும் இல்லாதது சொல்லலையே என்று கோபப்பட, மீனா ரோகினியை உட்காந்து சாப்பிட சொல்லுகிறார். உடனே விஜயா கோபப்பட்ட நான் அவல சாப்பிட கூடாதுன்னு சொன்னா நீ ஒக்காந்து சாப்பிட சொல்றியா என்று திட்டுகிறார் ரவி ஏமா இப்படி பண்றீங்க என்று கேள்வி கேட்க எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். உடனே நீ போய் அங்க நில்லு என்று தனியாக நிற்கச் சொல்ல ரோகிணி இந்த வீட்ல எனக்காக யாரும் பேச வேண்டாம் ஆன்டி என் மேல கோவமா இருக்குற வரைக்கும் நான் இந்த வீட்ல சாப்பிட மாட்டேன். நான் போறேன் என்று சொல்லி வீட்டில் இருந்து கிளம்ப மனோஜ் ரோகினி என்று பின்னாடி போக விஜயா சாப்பிட உட்கார வைக்கிறார்.
ரோகினி பார்வதியை சந்தித்து நடந்த விஷயங்கள் பற்றி கண்கலங்கி பேசுகிறார். ரோகிணி பார்வதியிடம் என்ன சொல்லுகிறார்?அதற்கு பார்வதியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.