நடிகர் மாதவனின் குடும்பத்துடன் நயன்-விக்கி, புத்தாண்டு கொண்டாட்டம்; எந்த நாட்டில் தெரியுமா?
நயனும் விக்கியும் 2025 புத்தாண்டின் குதூகலம் பற்றிய நிகழ்வு பார்ப்போம்..
தமிழ் சினிமாவில், நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக வந்த அவரது 75-வது படம் ‘அன்னபூரணி’.
இந்நிலையில், இந்த 2025 புத்தாண்டில் சுமார் 8 படங்கள் இருப்பில் உள்ளன. அதில் ‘டெஸ்ட்’ மற்றும் மண்ணாங்கட்டி, சின்ஸ் 1960 ஆகிய படங்களின் ஷூட் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகளே உள்ளன.
இதைத்தொடர்ந்து மலையாளத்தில் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ மற்றும் கன்னடத்தில் நடிகர் யாஷ்க்கு அக்காவாக நடித்து வரும் ‘டாக்ஸிக்’ ஆகிய படங்களும் படப்பிடிப்பில் உள்ளன.
இதைத்தவிர, தமிழில் ‘ராக்காயி’ மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ என தொடர்கிறது.
சினிமாவில் பிஸியாக இருக்கும் நயன், அடுத்தடுத்து சில புதிய தொழில்களிலும் தன்னை நயன்தாரா ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அதேபோல் தன் கணவர் இயக்கும், ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தையும் நயன்தாரா தனது ‘ரவுடி பிச்சர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரித்து வெளிவர இருக்கிறது.
நயன், டன் கணக்கில் பிஸியாக இருந்தாலும், காதல் கணவர் விக்கி மற்றும் குழந்தைகளுடன் அடிக்கடி வெளிநாட்டுக்கு பறந்து, என்ஜாய் செய்வதையும் நல்லபாலிஸியாக கடைப்பிடிக்கிறார்.
அவ்வகையில், 2025 புத்தாண்டை நடிகர் மாதவன் குடும்பத்தோடு இணைந்து வரவேற்க ஆர்வமாக உள்ளார். மாதவன் மற்றும் அவருடைய மனைவியுடன், போட்டில் நயன்தாராவும் – விக்னேஷ் சிவனும் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ‘எங்கள் காதல் அலைகள், என்றும் ஓய்வதில்லை’ என சூசகமாய் உணர்த்தி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. இதோ இந்த புத்தாண்டை புதிய பொலிவோடு நயன்தாரா துபாயில் கொண்டாட உள்ளார்.
முன்னதாக, மாதவன் மற்றும் நயன்தாரா இருவரும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.
ஆம், இதோ கடந்து போகும் 2024 டெஸ்ட் ஆண்டாக இருந்தால், 2025 பெஸ்ட் ஆண்டாக அமைய, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.!