Pushpa 2

உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ள, இதோ சுலப வழி: அஜித் பேச்சு குறித்து சமுத்திரக்கனி..

‘அஜித் ஸ்பீச் குறித்து, சமுத்திரக்கனி சொன்ன சேதி’ வைரலாய் தெறித்து வருவதை பார்ப்போம்..

‘தல’ அஜித் நடித்து, மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ திரைப்படம் ஜனவரி 10-ந்தேதி ரிலீஸாகவிருக்கிறது. மேலும், பாலாவின் வணங்கான், ஷங்கரின் கேம் சேஞ்சர் படங்களும் வருகின்றன.

‘விடாமுயற்சி’ படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. அதில் அஜித் மற்றும் திரிஷாவின் நடனம் கண்டு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இப்படம், ஹாலிவுட்டில் வெளிவந்த ‘பிரேக் டவுன்’ என்ற படத்தின் காப்பிதான் என சர்ச்சைகள் எழுந்தன. மேலும், அந்தப் படக்குழு லைகா நிறுவனத்திடம் 100 கோடி ரூபாய்வரை நஷ்ட ஈடு கேட்டதாகவும், பின்னர் பேசி 30 கோடி ரூபாய் ஃபைனல் ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டார் அஜித். இந்நிலையில், அஜித் குறித்து சமுத்திரக்கனியின் ஸ்பீச் தற்போது வைரலாகி வருகிறது.

‘துணிவு’ படத்தில் நானும் அஜித்தும் சேர்ந்து நடித்தோம். அப்போது அவர் என்னிடம், ‘நீங்கள் பைக்கை எடுத்துக்கொண்டு தனியாக ஒரு ட்ரிப் செல்லுங்கள். உங்களை யார் என்றே தெரியாதவர்கள் இருக்கும் ஊருக்கு செல்லுங்கள். அப்போது, நீங்கள் உங்களையே உணர்ந்து கொள்ளலாம்’ என கூறியதாக தெரிவித்துள்ளார்.

ஆம், பாடம் சொல்பவருக்கே பாடம் எடுத்திருக்கிறார் ‘தல’

ajith advices to samuthirakani here are details
ajith advices to samuthirakani here are details